நீரிழிவு நோயை குறைக்கும் நாவற்பழம்

Loading...

%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8dநாவல் பழத்தில் இரு வகைகள் உள்ளன. ஒன்று உருண்டை ரகம். இன்னொன்று நீள ரகம். இவற்றுள் நீள வடிவில் பெரியதாய் இருக்கும் பழவகையில்தான் இனிப்புச் சுவை அதிகம். பெரும்பாலான பழங்களை அப்படியேதான் உட்கொள்ள வேண்டும். நாவற்பழங்களை மட்டும் சிறிதளவ உப்புச் சேர்த்து சாப்பிட்டால் ருசி அதிகரிக்கும்.

இது குளிர்ச்சி தன்மையுடைய பழம். நாவற்பழ சுவையால் ஈர்க்கப்பட்ட பலர் அளவுக்கு அதிகமாக உண்பதுண்டு. இது தவறு. இப்பழத்தை அளவோடு உண்ண வேண்டும். நன்மையும், தீமையும் கலந்ததே இப்பழம் என்பதை உணர வேண்டும்.

கல்லீரலும் செரிமான உறுப்புகளும் நன்றாய் இயங்க பண்டைய மருத்துவரான சரகர் என்பவர் நாவல் பழத்தை சாப்பிடச் சொல்லியிருக்கிறார்.

ஆண்டின் சில மாதங்கள் மட்டுமே கிடைக்கும் நாவல் பழத்தில் நீரிழவு குணமாகிறது. உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும் இப்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் சி, பி ஆகிய தாது உப்புகளும் வைட்டமின்களும் உள்ளன. புரதச்சத்து 0.7%ம், மாவுச்சத்து 14%ம் இப்பழத்தில் உள்ளன.

நாவல் பழத்தின் விதைகளைக் காய வைத்து இடித்துப் பொடியாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு தடவைக்கு 3 கிராம் வீதம் நான்கு வேளைகள் தண்ணீரில் கலந்து இந்தத் தூளை உட்கொண்டால் சிறுநீரில் சர்க்கரையின் அளவு குறையும்.

ஆயுர்வேத மருத்துவத்தில் நீரிழிவு நோயாளிகள் குணம் பெற பின்வருமாறு செய்ய வேண்டும். அதாவது, நாவற்பழ மரத்தின் பட்டைகளை எரித்துச் சாம்பல் ஆக்கி அதனை பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.

அப்பொடியில் அரை தேக்கரண்டி எடுத்து காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் அருந்த வேண்டும். பிறகு இரவு உணவிற்குப் பிறகு இந்தத் தூளை ஒரு தேக்கரண்டி வீதம் அருந்த வேண்டும். இப்படி அருந்தினால் நீரிழிவு குறையும். பிறகு தூளின் அளவை நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க வேண்டும்.

இப்பழம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் தன்மையுடையது. நாவற் பழத்தை உண்டபின் அதில் உள்ள கொட்டையை வீசி எறியாமல். அவற்றை சேகரித்து, நிழலில் உலர்த்தி நன்கு அரைத்து தூள் செய்து கொண்டு அத்தூளை காலை மற்றும் மாலை சுத்தமான நீரில் கலந்து பருகிவர நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்கும்.

மூலநோயை நீக்கும், வாயுவைப் போக்கும், கல்லீரல் நோயை அகற்றும், கணையத்தில் ஏற்படும் வீக்கத்தைப் போக்கும். இப்பழத்தை அதிகமாக உண்பதால் தொண்டை தொடர்பான நோய்களை உருவாக்கும்.குடலில் கோளாறுகளை உண்டாக்கும் எனவே அளவோடு உண்ண வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply