நீரிலும் அழியாத போன் அதன் சிறப்பும்

Loading...

%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%a9இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பலர் சந்திக்கும் பிரச்சனை, செல்போன் தவறி நீரில் விழுந்துவிட்டால் அதோடு அதன் செயல்பாடு முடிந்துவிடும்.
அதனால் தற்போது வாட்டர் ப்ரூஃப் ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவில் தற்சமயம் பல்வேறு வாட்டர் ப்ரூஃப் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
பொதுவாக பிரபலமான வாட்டர் ப்ரூஃப் கருவிகளை வழங்குவதில் புகழ் பெற்ற சோனி நிறுவனம், தனது வாடிக்கையாளர்களிடம், சோனி வாட்டர் ப்ரூஃப் கருவிகளை நீரில் பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டது.
இந்த தகவல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய நிலையில், சோனி உள்ளிட்ட பல்வேறு வாட்டர் ப்ரூஃப் கருவிகளுக்கும் போட்டியாக இருக்கும் கருவி வெளியாக உள்ளது.
இதில் நீரில் மிதக்கும் ஐபிஎக்ஸ்7 சான்று பெற்றிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் கருவியை பற்றிதான் நாம் பார்க்க இருக்கின்றோம்.
நீரில் மிதக்கும் கோமெட் கோர் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்…
கோமெட் கோர் ஸ்மார்ட்போன், தற்சமயம் இன்டிகோகோ நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.
இந்த ஸ்மார்ட்போன் IPx7 சான்று பெற்றிருக்கின்றது. இதனால் இந்த கருவி நீரில் மிதக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பயோயன்ட் ஸ்மார்ட்போன் ஆகும்.
கோமெட் ஸ்மார்ட்போன் கருவியில் 16 எம்பி பின்பக்க கேமரா மற்றும் 16 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது.
இது 4ஜிபி ரேம் மற்றும் ஸ்னாப்டிராகன் 810 சிப்செட் கொண்டு 4.7 இன்ச் ஏஎம்ஓஎல்ஈடி திரை கொண்டிருக்கின்றது.
ஆண்ட்ராய்டு 5.1 ,2.0Ghz ஆக்டாகோர் ப்ராசஸர், ஸ்டாக் யூஸர் இன்டர்ஃபேஸ் மற்றும் க்யூ லாக் என்க்ரிப்ஷன் கருவியினை பாதுகாக்கும்.
இந்த ஸ்மார்ட்போன் 32ஜிபியின் விலை 249 டாலர் மற்றும் 64ஜிபியின் விலை 289 டாலர் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply