நிஸான் ஜிடி – ஆர் 2017 மாடல் காருக்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கியது

Loading...

%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-2017-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0ஜப்பானைச் சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான நிஸானின் தயாரிப்புகளில் பல மாடல் மார்க்கெட்டில் செம ஹிட். பிரத்யேகமான வடிவமைப்பு, பிராண்ட் நேம், மெஜஸ்டிக் லுக் என பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டது நிஸான் நிறுவன கார்கள். அந்நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஜிடி – ஆர் மாடலும் வாடிக்கையாளர்களிடம் ஏக வரவேற்பைப் பெற்ற கார்களில் ஒன்று. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சர்வதேச மோட்டார் ஷோவில் இந்த மாடல் அறிமுகப்படுத்தப்பட்ட போதே, பலரது கவனத்தையும் அது ஈர்த்தது. இந்தியாவில் இப்போது… அப்போது… என அறிமுகமாகும் தேதி தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இது ஆட்டோமொபைல் ஆர்வலர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருந்தது. இந்த நிலையில், அவர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி என்னவென்றால் நிஸான் ஜிடி – ஆர் 2017 மாடல் கார்களுக்கான முன் பதிவு தொடங்கியுள்ளது. நிஸான் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்களை (டீலர்கள்) வாடிக்கையாளர்கள் அணுகி இந்த புதிய மாடல் காரை புக் செய்யலாம். ஜிடி – ஆர் மாடலை வாங்க முன்தொகை அல்லது டெபாசிட்டாக ரூ.25 லட்சம் வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும். 1-800-209-3456 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் முன்பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். 3.8 லிட்டர் திறன் கொண்ட வி – 6 ட்வின் டர்போ எஞ்சின் இந்த மாடலில் பொருத்தப்பட்டுள்ளது. 562 பிஎச்பி முறுக்கு விசைத் திறனையும், 637 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட எஞ்சின் அது. 20 இன்ச் அலாய் வீல்களும் ஜிடி – ஆர் மாடலில் கொடுக்கப்பட்டுள்ளன. உள்புற வடிவமைப்பு கண்ணைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. இளஞ்சிவப்பு, கருப்பு, ஐவரி நிறத்திலான லெதர்களில் இன்டீரியர் வடிவமைக்கப்பட்டிருப்பது சிறப்பு. வெளிப்புறத் தோற்றமும் பக்கா ஸ்டைலிஷ் லுக்கைத் தருகிறது. ஆரஞ்ச், மெட்டாலிக் கருப்பு வண்ணம், கன் மெட்டாலிக், பேர்ல் வைட், ரெட், புளூ ஆகிய நிறங்களில் இந்தக் கார் மார்க்கெட்டுக்கு வரவுள்ளது. இதைத் தவிர ஏர் பேக், ஸ்மார்ட் கீ, பவர் விண்டோ, புளூடூத் என பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கிய காராக இருக்கிறது நிஸான் ஜிடி – ஆர் 2017. இதன் செயல்பாடும், ஆற்றலும் வாடிக்கையாளர்களை ஈர்க்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply