நாம் செய்யும் இந்த சிறு தவறுகளால் தான் உடல் எடை அதிகரிக்கிறது என்று தெரியுமா

Loading...

%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a4நாம் தினமும் சரியான டயட்டைப் பின்பற்றி, உடற்பயிற்சியை செய்து வந்தும், உடல் எடையைக் குறைக்க முடியாமல் போவதற்கான காரணங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
நம்மில் பலர் உடல் எடையைக் குறைப்பதற்கு நம் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கூறும் சில வழிகளைப் பின்பற்றுவோம். அவைகள் நல்ல பலனை வழங்காவிட்டால், அதனால் மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாவோம். ஆனால் அப்படி வருத்தப்படாமல், நாம் என்ன தவறு செய்வதால் உடல் எடை குறைவதில்லை என்று யோசிக்க வேண்டும்.

இங்கு நாம் சரியான டயட்டைப் பின்பற்றி, உடற்பயிற்சியை செய்து வந்தும், உடல் எடையைக் குறைக்க முடியாமல் போவதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
கல் உப்பு எடையைக் குறைக்க டயட்டில் இருக்கும் போது பெரும்பாலான மக்கள் செய்யும் தவறுகளில் ஒன்று கல் உப்பை சேர்ப்பது. கல் உப்பில் அயோடின் குறைவாக உள்ளது. உடலின் முக்கிய செயல்பாட்டை சீராக செய்வதற்கு அயோடின் அவசியம். இந்த அயோடின் போதிய அளவில் கிடைக்காவிட்டால், உடல் பருமனடையும்.
வறுத்த உணவுகள் ஹோட்டல்களுக்கு சென்றால், ஸ்டாட்டர்ஸ் ஆர்டர் செய்யும் போது, நம்மால் எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவுகளை சாப்பிடாமல் இருக்க முடியாது. ஒரு நாள் தானே என்று டயட்டில் இருக்கும் போது ஒருமுறை இந்த உணவுகளை சாப்பிட்டாலும், அது உடல் எடை குறைவதில் இடையூறை ஏற்படுத்தும்.
ஆரோக்கியமான சில எடையை அதிகரிக்கும் உணவுகள் நாம் சாப்பிடக்கூடிய அனைத்து உணவுகளுமே உடலுக்கு நல்லது தான். ஆனால் அந்த உணவுகளில் சில நம் உடல் எடையை அதிகரிக்கும் என்பது தெரியுமா? உதாரணமாக, சோயா பீன் எண்ணெயை காய்கறி சாலட்டில் சேர்த்தால், அது நாம் செய்யும் மிகப்பெரிய தவறாகும். ஏனெனில் அவை உடல் எடையைக் குறைப்பதற்கு பதிலாக, எடையை அதிகரிக்கும்.
நல்ல கொழுப்புக்களைத் தவிர்ப்பது நம்மிடம் உள்ள ஒரு கெட்ட பழக்கம், நல்ல கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளும் உடல் பருமனை உண்டாக்கும் என நினைப்பது தான். உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு நல்ல கொழுப்புக்கள் அவசியமானது. இத்தகைய நல்ல கொழுப்புக்கள் நட்ஸ், அவகேடோ மற்றும் ஆலிவ் ஆயிலில் உள்ளது. இந்த உணவுகள் உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவும்.
அளவுக்கு அதிகமான புரோட்டீன் உடலுக்கு புரோட்டீன் அத்தியாவசியமான சத்து என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த புரோட்டீன் ஒருவரது உடலில் அளவுக்கு அதிகமானால், அதனால் உடல் பருமன் தான் அதிகரிக்கும்.
மெல்லும் பழக்கம் உணவுகளை உண்ணும் போது வேகமாக மென்று விழுங்காமல், மெதுவாக மென்று விழுங்க வேண்டும். இதனால் உடல் எடை தான் அதிகரிக்கும். எப்படியெனில் வேகமாக சாப்பிடும் போது, ஹார்மோன்களால் மூளைக்கு வயிறு நிரம்பிவிட்டது என்ற சிக்னலை அனுப்ப முடியாமல் போய், அதிகமான உணவுகளை உண்ண நேரிடும்.
உணவுகளைத் தவிர்ப்பது உடல் எடையைக் குறைக்க நிறைய பேர் செய்யும் தவறு தான் உணவுகளைத் தவிர்ப்பது. இப்படி உணவுகளைத் தவிர்த்தால், அதனால் எடை குறைவதற்கு பதிலாக, உடல் பருமன் அதிகரிப்பதுடன், வேறு பல உடல்நல பிரச்சனைகளாலும் அவஸ்தைப்படக்கூடும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply