நரை முடியைத் தடுக்க நறுக் எண்ணெய்

Loading...

%e0%ae%a8%e0%ae%b0%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%81%e0%ae%95நரை முடி பிரச்சனை இன்று பெரும்பாலானோரும் சந்திக்கும் ஒன்றாக இருக்கின்றது. இளைஞர்களின் அழகைக் கெடுப்பதில் நரை முடி முதன்மையானதாக இருக்கின்றது.

தவறான உணவு பழக்கத்தினால் உடலில் ஏற்படும் சத்துக் குறைபாடு காரணமாகவே நரை முடி ஏற்படுகின்னறது. இங்கு நரை முடியினைத் தடுக்கும் ஆயுர்வேத எண்ணெய் குறித்த விரிவான தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள்..

* வாரம் இருமுறை கடுகு எண்ணெய்யைத் தலையில் தேய்த்துக் குளித்தால் வயதானாலும் நரை முடி எளிதில் வராது. கடுகு எண்ணெய்யை லேசாகச் சூடுபடுத்தித் தலையில் மசாஜ் செய்தால் நரை முடி மறையும்.

* ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த எண்ணெய்யை உபயோகித்தால் கூந்தல் அடர்த்தியாக வளரும். வட இந்தியர்களில் கூந்தல் அழகிற்கு இதுதான் காரணம்.

* கடுகு எண்ணெய் பயன்படுத்துவதால் ஈரப்பதம் அதிக நேரம் கூந்தலில் நீடிக்கும். எளிதில் வறட்சி அடையாது.

* பொடுகு அரிப்பினால் கூந்தல் ஆரோக்கியமற்றதாகக் காணப்பட்டால் கடுகு எண்ணெய் கொண்டு தினமும் மசாஜ் செய்யக் குளிக்க வேண்டும். இதனால் கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.

* மெலிதான கூந்தல் இருந்தால் வாரம் மூன்று நாட்கள் கடுகு எண்ணெய் கொண்டு ஆயில் மசாஜ் செய்து குளித்து வரக் கூந்தல் அடர்த்தி அதிகரிக்கும்.

* கூந்தலில் நுனி அடிக்கடி பிளவு உண்டானால் அதிகமாக முடி உதிர்தல் ஏற்படும். இதனைத் தடுக்கக் கடுகு எண்ணெய்யால் மசாஜ் செய்து வர நுனி பிளவு நீங்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply