நம்பகத்தன்மை வாய்ந்த உலகின் டாப் 20 கார் நிறுவனங்கள் எவை பக்கா சர்வே ரிப்போர்ட் இதோ

Loading...

%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து விளம்பரம் தந்தாலும் சரி, முன்னணி நடிகர் – நடிகைகள், கிரிக்கெட் வீரர்களை அம்பாசிடர்களாக நியமித்தாலும் சரி, ஒரு காரின் விற்பனையை அது தீர்மானிப்பதில்லை. வாடிக்கையாளர்கள்தான் அதன் விற்பனையையும், செயல்பாட்டையும் தீர்மானிக்கும் நீதிபதிகள். காரை வாங்கியவர்கள், அது நன்றாக இருக்கிறது என்று நான்கு பேரிடம் பரிந்துரைப்பதில்தான் இருக்கிறது அந்த வாகனத்தின் வெற்றி. அப்படி வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்குரிய கார் நிறுவனங்கள் எவை? என்று ஒரு சர்வே எடுத்திருக்கிறது ஜேடி பவர் நிறுவனம். கடந்த 2013- ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட கார்கள் மட்டுமே இந்த சர்வேக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதன் முடிவில் வெளிவந்த அதிர்ச்சியான உண்மை என்னவென்றால், புகழ்பெற்ற சில முன்னணி கார் நிறுவனங்கள் எல்லாம் வாடிக்கையாளர்கள் அளித்த தர வரிசையில் பின்னுக்குச் சென்று விட்டன. வாருங்கள் அதையும் பார்ப்போம்…
20.
மெர்சடைஸ் பென்ஸ் சொகுசு கார் உற்பத்தியில் சிறப்பிடம் பெற்றுள்ள இந்த நிறுவனம் தர வரிசையில் 20-ஆவது இடத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டதற்கு முக்கியக் காரணம், மெர்சடைஸ் கார்களில் ஏற்படும் பிரச்னைகள். அந்த நிறுவனத்தின் கார்களில் நிலவும் பிரச்னைகளுக்கான புள்ளிகள் கடந்த ஆண்டில் 154 -ஆக உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில் அது 88-ஆக மட்டுமே அது இருந்தது.
19. மினி
கடந்த ஆண்டு 13-ஆவது இடத்தில் இருந்த மினி நிறுவனம், இந்த ஆண்டு 6 இடங்கள் சரிந்து தர வரிசையில் 19-ஆவது இடத்துக்கு வந்துள்ளது. காரில் உள்ள பிரச்னைகள் 105 புள்ளிகளில் இருந்து 140-ஆக உயர்ந்ததே இதற்குக் காரணம்.
18. ஹுண்டாய்
தென் கொரிய கார் உற்பத்தி நிறுவனமான ஹுண்டாயில் நிலவும் பிரச்னைகள் 117 புள்ளிகளில் இருந்து 130-ஆக அதிகரித்த போதிலும், 19-ஆம் இடத்திலிருந்து முன்னேறி 18-ஆம் இடத்துக்கு வந்துள்ளது.
17.
வால்வோ ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த வால்வோ நிறுவனம் இந்த ஆண்டு சர்வேயில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு 7-ஆம் இடத்திலிருந்த அந்நிறுவனம், பரமபத பாம்பு கொத்தியதைப் போல சர சரவென வீழ்ச்சியடைந்து
17-ஆம் இடத்தில் வந்து நிற்கிறது. பிரச்னைகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட புள்ளிகளின் அளவு 93-இலிருந்து 123-ஆக அதிகரித்ததே அதற்குக் காரணம்.
16. ஜாகுவார்
கடந்த ஆண்டு தரவரிசைப் பட்டியலில் 23-ஆவது இடத்தில் இருந்த ஜாகுவார், இந்த முறை சிறப்பானதொரு இடத்தை எட்டிப் பிடித்துள்ளது. பிரச்னைகளுக்கான புள்ளிகள் 173-இலிருந்து 123-ஆக குறைந்ததால் இந்த வெற்றியை அடைந்துள்ளது அந்நிறுவனம்.
15. ஹோண்டா
முந்தைய ஆண்டு இருந்த அதே இடத்தில் பசை போட்டு ஒட்டியது போல இந்த ஆண்டும் நீடிக்கிறது ஹோண்டா. வாடிக்கையாளர்கள் தெரிவித்த பிரச்னைகளின் அடிப்படையில் கணக்கிடப்பட்ட புள்ளிகளின் அளவு கடந்த முறை 116-ஆகவும், இம்முறை 117-ஆகவும் உள்ளது.
14. ரெனால்ட்
ரெனால்ட் நிறுவனமும் அதே போலத்தான். கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கான தர வரிசைப் பட்டியலில் அதே இடத்தில் நீடிக்கிறது. இரு ஆண்டுகளில் புள்ளிகள் முறையே 116 மற்றும் 115-ஆக உள்ளன.
13. சிட்ராய்ன்
இதுவும் ஹோண்டா, ரெனால்ட் போலத்தான்… ஒய் பிளட்… சேம் பிளட் வகையறாவில் அதே இடத்தில் நீடிக்கிறது. கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டுக்கான புள்ளிகள் 114 மற்றும் 115.
12. ஃபியட்
ரெனால்ட், ஹுண்டாய், சிட்ராய்ன் ஆகிய நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு பீடு நடை போட்டு முன்னால் வந்துள்ளது ஃபியட் நிறுவனம். 117 புள்ளிகளில் இருந்து 115 புள்ளிகளாக பிரச்னைகள் குறைந்தது அதற்கு முக்கியக் காரணம்.
11. மஸ்தா
இந்த நிறுவன கார்களில் உள்ள பிரச்னைகள் சற்று அதிகரித்திருந்தாலும் (105 -இலிருந்து 111-ஆக உயர்வு) தர வரிசையில் ஒரு இடம் முன்னேறியுள்ளது. கடந்த ஆண்டு மஸ்தா 12-ஆவது இடத்தில் இருந்தது.
10. நிசான்
ஜப்பானின் முன்னணி கார் நிறுவனமான நிஸானுக்கு இந்த ஆண்டு அவ்வளவு ராசியாக இல்லை போல. 4-ஆம் இடத்தில் இருந்து டமார் என 10-ஆம் இடத்துக்கு வீழ்ந்துள்ளது. வாடிக்கையாளர்கள் கூறிய பிரச்னைகளின் அளவு 87 புள்ளிகளில் இருந்து 98-ஆக அதிகரித்ததுதான் இந்த சரிவுக்கு காரணம்.
9. டொயோட்டா
டொயோட்டா நிலைமையும், நிஸானைப் போலத்தான். கடந்த ஆண்டு 6-ஆவது இடத்தில் இருந்த இந்த நிறுவனம் இந்த முறை 9-ஆவது இடத்துக்கு வந்துள்ளது. புள்ளிகள் 88-இலிருந்து 96-ஆக எகிறியதால்தான் டொயோட்டாவுக்கு இந்த நிலை.
8. சீட்
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சீட் நிறுவனம் மீது வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நம்பிக்கை இம்முறை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 11-ஆம் இடத்தில் இருந்த நிறுவனம் இப்போது 8-ஆம் இடத்தில் உள்ளது. பிரச்னைகளின் அளவு 99 புள்ளிகளில் இருந்து 96-ஆக குறைந்துள்ளது.
7. ஃபோர்டு
அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டாலும், வாடிக்கையாளர்கள் அதன் மேல் வைத்துள்ள நம்பிக்கை அதிகரித்துள்ளது என்றே கூறலாம். கடந்த ஆண்டு 14-ஆவது இடத்தில் இருந்த இந்நிறுவனம், இம்முறை 7 இடங்கள் முன்னேறியுள்ளது. பிரச்னைகள் 111 புள்ளிகளில் இருந்து 95-ஆகக் குறைந்துள்ளது.
6. ஃபோக்ஸ்வேகன்
ஃபோர்டைப் போலத்தான் ஃபோக்ஸ்வேகனும். டீசல் எஞ்சின் மாசக் கட்டுப்பாட்டு முறைகேட்டில் சிக்கிய போதிலும், கடந்த ஆண்டைக் காட்டிலும் 2 இடங்கள் முன்னேறி தர வரிசையில் 6-ஆம் இடத்துக்கு வந்துள்ளது. 95 புள்ளிகளில் இருந்த பிரச்னைகள் 92-ஆக சரிந்ததே அதற்குக் காரணம்.
5. பியூஜியட்
சென்ற முறை 10-ஆம் இடத்தில் இருந்தது இந்நிறுவனம். 99-இல் இருந்து 92 புள்ளிகளாக பிரச்னைகள் குறைந்து இப்போது 5-ஆம் இடத்துக்கு வந்தது நல்ல முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
4. வாக்ஸ்ஹால்
இந்த நிறுவனமும், இந்த முறை சர்வேயில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்ற ஒன்றாகத் திகழ்கிறது. கடந்த ஆண்டு 9-ஆம் இடத்தில் இருந்து இப்போது 4-ஆவதாக உயர்ந்து நிற்பதே அதற்கு சான்று (98 புள்ளிகளில் இருந்து 90-ஆக சரிவு).
3. கியா
கடந்த ஆண்டைக் காட்டிலும் பிரச்னைகளின் அளவை 83 புள்ளிகளில் இருந்து 80-ஆக குறைத்துள்ளது இந்த நிறுவனம். இருப்பினும் 2-ஆம் இடத்தில் இருந்து 3-ஆம் இடத்துக்கு சரிவடைந்துள்ளது.
2. சுஸுகி
இந்த ஆண்டின் ரன்னர் – அப் நிறுவனம். கியாவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது சுஜூகி. பிரச்னைகளின் அளவு 86-இல் இருந்து 79-ஆக குறைந்ததற்கான பயன் இது.
1. ஸ்கோடா
வாடிக்கையாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், உள்ளம் கவர் கள்வனாகவும் தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக முடி சூட்டிக் கொள்கிறது ஸ்கோடா நிறுவனம். கடந்த ஆண்டு 77 புள்ளிகளாக இருந்த பிரச்னைகளை இம்முறை 66- புள்ளிகளாக குறைத்துள்ளது இந்நிறுவனம். அதன் காரணமாகத்தான் மக்கள் மனதில் தொடர்ந்து மன்னனாக வலம் வருகிறது ஸ்கோடா. இந்த டாப் 20 தர வரிசை மூலம் எந்த கார் நிறுவனம் சிறந்தது? என்பதை உங்களால் ஓரளவு யூகிக்க முடியும் என நம்புகிறோம். இதுபோன்ற பயனுள்ள தகவல்களுக்கு டிரைவ் ஸ்பார்க்குடன் தொடர்ந்து பயணியுங்கள்…. குட் லக்..

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply