தொடர்ந்தும் போன் பிரியர்களுக்கு – நெக்சஸ் 5எக்ஸ், நெக்சஸ் 6பி வெளியீடு

Loading...

%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8dஆப்பிள் ஐபோனிற்கு இணையான வசதிகள் கொண்ட கூகுளின் நெக்சஸ் திறன் பேசிகள் வெளியிடப்பட்டுள்ளது.
நெக்சஸ் 5எக்ஸ், நெக்சஸ் 6பி ஆகிய திறன்பேசிகளை, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில், நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆண்டிராய்டு பிரிவு துணை தலைவர் டேவிட் புர்க் அறிமுகம் செய்தார்.
இதனை திறன்பேசி பிரியர்களுக்கு ஏற்ற விதமாக கூகுள் வடிவத்துள்ளது. நெக்சஸ் 5எக்ஸ் திறன்பேசியை எல்ஜி நிறுவனமும், நெக்சஸ் 6பி-யை ஹவாய் நிறுவனமும் தயாரித்துள்ளன.
ஆன்டிராய்டு 6 பதிப்பு இயங்குதளத்தைக்கொண்ட இந்த திறன்பேசியில் ஏராளமான வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
அடுத்த மாதம் சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள இந்த திறன்பேசிகளுக்கான முன்பதிவு அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், அயர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இன்று முதல் தொடங்கியுள்ளது. நெக்சஸ் 5எக்ஸ் மற்றும் நெக்சஸ் 6பி-க்கான விலை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நெக்சஸ் 5எக்ஸ் – 16 ஜி.பை – விலை: $379 (ரூ.25000)
நெக்சஸ் 6பி – 32 ஜி.பை – விலை: $499 (ரூ.33000)

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply