திருடப்பட்ட காரைக் கண்டறியும் டிராக்கிங் சாதனம்…பெங்களூரில் விரைவில் அறிமுகம்

Loading...

%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%9f%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b1கார் திருட்டு மற்றும் கடத்தல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நாம் அன்றாடம் செய்திகளில் காண்கிறோம். இளம்பெண்களைக் காருடன் கடத்தும் சம்பவங்கள் கூட பெருகி வருவதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதைத் தவிர, எவ்வளவுதான் பாதுகாப்புடன் கார்களை தனியாக நிறுத்தி வைத்திருந்தாலும், அவற்றை நூதனமாகத் திருடும் லாவகமான கும்பல் நச்சுச் செடிகளைப் போல பரவி வருகின்றன. அண்மையில் நொய்டாவில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பில் ஆடி மற்றும் பிஎம்டபிள்யூ கார்களை இரு இளைஞர்கள் பட்டப் பகலில் திருடிச் சென்றனர். இதுபோன்ற நிகழ்வுளைத் தடுக்க கார் டிராக்கர் சாதனைத்தை பெங்களூரில் அறிமுகப்படுத்த உள்ளது டிராக் அண்டு டெல் நிறுவனம். இந்த சாதனத்தைப் பொருத்துவதன் மூலம், திருப்பட்ட அல்லது கடத்தப்பட்ட கார் எங்கு பயணிக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும். மேலும், அது எந்த வழித் தடத்தில் செல்கிறது. எந்த நேரத்தில் அந்தக் கார் பயணித்தது என்பன போன்ற தகவல்களையும் இந்த சாதனத்தின் வாயிலாக நாம் பெறலாம். இன்டெலி 7 எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த டிராக்கிங் சாதனத்தை அடுத்த மாதம் பெங்களூரில் அறிமுகப்படுத்த டிராக் அண்டு டெல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு பெங்களூரில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் இந்த சாதனம் அறிமுகப்படுத்தப்பட்ட போதே பெரும்பாலானோரது கவனத்தை அது ஈர்த்தது. தில்லிக்கு அடுத்து பெங்களூரில்தான் இந்த டிராக்கிங் சிஸ்டம் அறிமுகமாகவுள்ளது. இ – காமர்ஸ் எனப்படும் இணையவழி வர்த்தகத்திலும் இந்த சாதனத்தை வாங்க முடியும். இதைத்தவிர, பிரபல கார் சாதனங்கள் விற்பனை செய்யும் ஷோ ரூம்களிலும் இன்டெலி 7 கிடைக்கும். இதுகுறித்து கருத்து தெரிவித்த டிராக் அண்டு டெல் நிறுவனத்தின் தலைவர் பிரான்சு குப்தா, பெங்களூரில் ஓடும் மொத்த கார்களில் சராசரியாக 15 சதவீதம் கார்கள் திருடப்படுவதாக காப்பீட்டு நிறுவனங்கள் தகவல் அளித்துள்ளன என்று தெரிவித்தார். இந்த எண்ணிக்கை தில்லியைக் காட்டிலும் அதிகம் என்று தெரிவித்த அவர், பெங்களூரில் இயங்கும் கார்களில் பாதுகாப்பு அம்சங்கள் மிகக் குறைவாக உள்ளதாக வருத்தம் தெரிவித்தார். அதன் காரணமாக இன்டெலி 7 சாதனத்தை அந்நகரில் அறிமுகப்படுத்தப் போவதகாவும் குப்தா கூறினார். இதுபோன்ற பாதுகாப்பு கருவிகள் நியாயமான விலையில் கிடைத்தால், அனைத்து நகரங்களிலும் அது பரவலான வரவேற்பைப் பெறும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply