தள்ளிப்போகாதே பாடலில் ஏற்பட்ட வினோதமான அனுபவம் – தாமரை கூறிய ரகசியம்

Loading...

சிம்பு நடிப்பில் வெள்ளிக்கிழமை வெளிவரவிருக்கும் அச்சம் என்பது மடமையடா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடந்தது. இதில் பேசிய தாமரை ” இப்படத்தில் நான் இரண்டு பாடல்கள் எழுதியுள்ளேன், ராசாளி மற்றும் தள்ளிப்போகாதே.


தள்ளிப்போகாதே பாடல் வரிகள் உருவாக்கம் ஒரு வித்தியாசமான அனுபவம். ஒரு நாள் ரஹ்மான் அனுப்பிய மெட்டை கவுதம் கொண்டு வந்தார். அந்த மெட்டை என்னால் உணர்ந்து கொண்டு வரிகள் எழுதவே முடியவில்லை, சின்ன சின்ன மியூசிக் தான் இருந்தது.


இது ரொம்ப கஷ்டம் கவுதம் என்றேன். அதற்கு கவுதம், ரஹ்மான் இந்த மெட்டை அவர் விமானத்திலிருந்து அனுப்பினார், மேலும் நமக்கு நேரம் கிடையாது தாமரை , நான் சூழ்நிலை சொல்கிறேன், அதற்கு ஏற்றார் போல் தாருங்கள் என்றார்.


ஆனால் ரஹ்மான் எப்போதுமே இந்த மாதிரி தான், முழுப்பாடல் உருவான பிறகு பாருங்கள் என்றார். அந்த பாடல் தான் தற்போதைய எல்லா இளைஞர்களின் ரிங்க்டோனாக இருக்கும் தள்ளிப்போகாதே பாடல் என்று கூறினார்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply