டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் செடான் பிரேசிலில் அறிமுகம் – இந்தியாவிற்கு வருமா

Loading...

%e0%ae%9f%e0%af%8a%e0%ae%af%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%8b%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%be%e0%ae%9fடொயோட்டா நிறுவனம் தயாரிக்கும் டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் செடான் பிரேசிலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் செடான் தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.
டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம்…
டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம், ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனம் தயாரித்து வழங்கும் செடான் ஆகும். பொலிவு கூட்டப்பட்ட டொயோட்டா எட்டியோஸ், பிரேசிலில் அதன் அலுவல் ரீதியான அறிமுகத்திற்கு முன்னதாக அறிமுகம் செய்யபட்டது. டொயோட்டா நிறுவனம், இதற்கு டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் என பெயர் சூட்டியுள்ளது.
சோதனைகள்;
பொலிவு கூட்டப்பட்ட புதிய டொயோட்டா எட்டியோஸ், இந்திய சாலைகளில் செய்யப்பட்டு வருகிறது. இந்த சோதனைகள், இது இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்பதையே குறிக்கிறது.
முக்கிய அம்சங்கள்;
புதிய டொயோட்டா எட்டியோஸ் செடான், புதிய ஃபிரண்ட் கிரில், புதுப்பிக்கப்பட்ட ஃபிரண்ட் மற்றும் ரியர் பம்பர், புதிய ஃபாக் லேம்ப் ஹவுசிங், ஃபிளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் மற்றும் புதிய அல்லாய் வீல்கள் ஆகிய அம்சங்கள் கொண்டுள்ளது.
எக்ஸ்டீரியர்;
புதிய டொயோட்டா எட்டியோஸ் செடானின் எக்ஸ்டீரியருக்கு, பிளாக் இன்சர்ட்கள் மற்றும் வி-வடிவ கிரில் உடைய ஃபிரண்ட் பம்பர் மற்றும் குரோம் பூச்சு செய்யபட்ட ஆக்ஸன்ட்கள் ஆகிய அம்சங்கள் பொருத்தபட்டுள்ளன. இதன் பக்கவாட்டில் சைட் ஸ்கர்ட்ஸ் உள்ளது. மேலும், இதன் ரியர் பகுதியில் ஸ்பாய்லர் மற்றும் குரோம் ஸ்ட்ரிப் உடைய பூட் லிட் ஆகிய அம்சங்கள் உள்ளன.
இன்டீரியர்;
இன்டீரியர் பொருத்த வரை, இதன் டிசைன் முன்பு இருந்த மாடலில் உள்ளது போன்றே தான் உள்ளது. ஃபிளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவற்றில் மட்டும் சிறிய மாற்றங்கள் செய்யபட்டுள்ளது. மேலும், இதன் சீட்கள் மற்றும் அப்ஹோல்ஸ்ட்ரிக்கு புதிய ஃபேப்ரிக்கினால் செய்யபட்டுள்ளது.
இஞ்ஜின்;
இந்தியாவிற்கான புதிய டொயோட்டா எட்டியோஸ் செடானின் இஞ்ஜின், பழைய மாடலில் உள்ளது போன்றே இருக்கும். பிரேசிலிலுக்கான டொயோட்டா எட்டியோஸ் பிளாட்டினம் செடான், 106 பிஹெச்பியை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டியூவல் விவிடி பெட்ரோல் இஞ்ஜின் கொண்டுள்ளது.
கியர்பாக்ஸ்;
டொயோட்டா எட்டியோஸ் செடானின் இஞ்ஜின் 4-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கபட்டிருக்கும்.
விலை;
புதிய டொயோட்டா எட்டியோஸ் செடான், பிரேசிலில் R$ 65,990 (இந்திய மதிப்பில் 13.53 லட்சம் ரூபாய் என்ற விலையில் விற்கபடுகிறது. எனினும், இது இந்தியாவில் என்ன விலையில் விற்கப்படும் என்ற விவரங்கள் வெளியாகவில்லை. விலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதி கருத்து;
இந்தியாவிற்கான புதிய டொயோட்டா எட்டியோஸ் செடானிலும், பிரேசிலில் வழங்கப்படும் மாடலில் உள்ளது போன்ற மாற்றங்கள் செயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply