டெஸ்லா நிறுவனத்தின் சோலார் கூரைத் தகடுகளைப் பயன்படுத்தி மின்சக்தி

Loading...

%e0%ae%9f%e0%af%86%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b2%e0%ae%beபிரபல கார் வடிவமைப்பு நிறுவனமான டெஸ்லா ஆனது சில வாரங்களுக்கு முன்னர் சோலார் தொழில்நுட்பத்தினைக் கொண்ட கூரைத் தகடுகளை அறிமுகம் செய்யவிருப்பது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டிருந்தது.
அத்துடன் நின்றுவிடாது சில தினங்களுக்கு முன்னர் இக் கூரைத் தகடுகள் சாதாரண தகடுகளினை விடவும் விலை குறைாவக இருக்கும் என்ற மற்றுமொரு தகவலையும் தெரிவித்திருந்தது.
இந்த அறிவித்தல் வெளியான சில நாட்களிலேயே அமெரிக்கன் சமோஆ என்ற தீவில் அதிரடி மாற்றம் ஒன்று செய்யப்பட்டுள்ளது.
அதாவது இதுவரை காலமும் இத் தீவில் டீசல் எரிபொருளைக் கொண்டே தேவையான 1.4 மெகாவாட்ஸ் மின்சக்தி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
தற்போது 100 சதவீதம் டெஸ்லா நிறுவனத்தின் சோலார் கூரைத் தகடுகளைப் பயன்படுத்தி மின்சக்தியை உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளனர்.
முன்னர் நாள் ஒன்றிற்கு தேவையான மின்சக்தியினை பெறுவதற்கு 1,135 லீட்டர் டீசலை பயன்படுத்தியுள்ளனர்.
ஆனால் 5,328 சோலார் கூரைத்தகடுகளை பொருத்தி தேவையான மின்சக்தியை அவர்கள் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளனர்.
இத் தீவானது அமெரிக்காவில் இருந்து மேற்கு புறமாக 7,000 கிலோ மீற்றர்கள் தொலைவில் இருப்பதுடன், இங்கு 600 வரையான குடியிருப்பாளர்களும் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply