டெல்லியில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களுக்குத் தடை பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி

Loading...

%e0%ae%9f%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95-%e0%ae%92%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%8e%e0%ae%b4%e0%af%81%e0%ae%aaதேசத்தின் தலைநகராக இருந்தாலே, அங்கு பிரச்னைகளுக்கு அளவே இருக்காது என்றுதான் அர்த்தம். நாள்தோறும் ஏதாவது ஒரு சர்ச்சைகள் கிளம்பி விடும். தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கும், மத்திய அரசுக்கும் தொடர்ந்து முட்டிக் கொண்டு இருப்பது அதில் ஒரு ரகம். அரசியல் பிரச்னைகளைத் தாண்டி, சமூகம் மற்றும் சூழல் சார்ந்த விவகாரங்களை எடுத்துக் கொண்டால், தில்லியில் அதற்கும் பஞ்சமில்லை. அதிக புகையைக் கக்கும் டீசல் வாகனங்களுக்கு அந்த மாநில அரசு அதிரடியாகத் தடை விதித்தது. இதைத் தவிர ஒற்றை படை எண் கொண்ட வண்டிகள் மட்டுமே ஒரு நாள் சாலையில் செல்ல வேண்டும் என்றும், இரட்டை படை எண் கொண்ட வாகனங்கள் மற்றொரு நாள் செல்ல வேண்டும் என்று சோதனை முயற்சியில் விதிகள் வகுக்கப்பட்டன. இதையெல்லாம் கடந்து தற்போது ஒலி மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு தில்லியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாட்டை விதித்திருப்பது மாநில அரசல்ல, தேசிய பசுமைத் தீர்ப்பாயம். அதிக ஒலி எழுப்பக் கூடிய பிரஸரைஸ்டு ஹாரன்களை அழுத்த நகரி்ல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான பொது நல மனு ஒன்று தில்லியில் உள்ள தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்துக்கு வந்தது. அதனை விசாரித்த தீர்ப்பாயத்தின் தலைவர் ஸ்வதேந்தர் குமார் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதிக ஒலி எழுப்பக் கூடிய ஹாரன்களைத் தடை செய்வது தற்போதைய இன்றியமையாத தேவையாகும். தில்லியில் வாகனங்களால் ஏற்படும் ஒலி மாசு பிரச்னை மிக முக்கியமான ஒன்று. மாநில அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான பஸ்களும் ஒலி மாசு உருவாக்குவதில் அதிமுக்கியப் பங்கு வகிக்கின்றன. அதிக சப்தம் எழுப்பும் ஹாரன்களுக்கும், சைலன்ஸர் அகற்றப்பட்ட பைக்குகளுக்கும் தில்லியில் நுழைய அனுமதி கிடையாது என்றார் அவர். இந்தப் பிரச்னையை ஆய்வு செய்யவும், ஒலி மாசில்லாத இடத்தைக் கண்டறியவும் பிரத்யேக குழுவொன்றை பசுமைத் தீர்ப்பாயம் அமைத்துள்ளது. இதில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சக அதிகாரிகள், தில்லி மாநில அரசு அதிகாரிகள், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். அமைதி மற்றும் தூய்மையான சமூகம் உருவாக்கும் பொருட்டு, அதற்காக விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை மக்களும் ஏற்றுக் கொள்வது அவசியம். இந்த விஷயத்தில் குறிப்பாக இளைஞர்கள் அதீத கவனம் செலுத்த வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply