டுபாய் ரொட்டி

Loading...

%e0%ae%9f%e0%af%81%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b0%e0%af%8a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bfடுபாய் ரொட்டி
8 ரொட்டிகள்

தேவையான பொருட்கள்

கோதுமை மா 1/4 கி . கிராம்
கரட் 100 கிராம்
லீக்ஸ் 100 கிராம்
உருளைக்கிளங்கு 100 கிராம்
கறிமிளகாய் 100 கிராம்
சிறிதாக வெட்டிய வெங்காயம் 2 மேசைக்கரண்டி
சிறிதாக வெட்டிய பச்சைமிளகாய் 2 மேசைக்கரண்டி
மிளகுதூள் அளவிற்கு
உப்புத்தூள் அளவிற்கு
மாஜரின் அல்லது தேங்காய் எண்ணெய் 2 மேசைகரண்டி
முட்டை 1

செய்முறை

கரட் , லீக்ஸ் , உருளைக்கிளங்கு , கறிமிளகாய் என்பவற்றை கழுவி சிறிதாக வெட்டி கொள்க .
கோதுமை மாவை அரித்து வைத்து கொள்க .
முட்டையை நன்கு அடித்து வைத்து கொள்க
தாச்சியில் ஒரு மேசைக் கரண்டி மாஜரினை விட்டு காயவைத்து அதனுள் வெட்டிய மரக்கறிகளை போட்டு அரைபதமாக வதக்கிவிட்டு வதங்கிய பின் அதனுள் வெட்டிய மிளகாய் , வெங்காயம் என்பவற்றை போட்டு மூடிவிடவும் .
மரக்கறி வகைகள் வதங்கியவுடன் உப்புத்தூள் , மிளகுதூள் சேர்த்து இறக்கி கொள்ளவும் .
பின்பு அரித்து வைத்துள்ள மாவை பாத்திரத்திலிட்டு வதங்கிய(விஜய்தமிழ்.Net ஸ்பெஷல்) மரக்கறிகளை சேர்த்து கொண்ட பின் அடித்து வைத்துள்ள முட்டையை சிறிது சிறிதாக ஊற்றி நன்கு பிசைந்து தண்ணீரும் அளவிற்கு விட்டு ரொட்டி மா பதத்திற்கு குழைத்து எட்டு சம அளவான உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்க .
பின்பு தோசை சட்டியில் சிறிதளவு மாஜரினை இட்டு பரவிக்கொண்ட பின்பு ஒவ்வொரு உருண்டையாக ஒரு அப்பம் அளவு தட்டையாக தட்டி சட்டியில் ஒவ்வொன்றாக போட்டு இரு புறமும் திருப்பி வேக விட்டு எடுத்துகொள்க .

Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply