டீசல் வாகன தடை நீக்கத்திற்கு பின் டெல்லியில் மீண்டும் விற்பனையாகும் கார்கள்

Loading...

%e0%ae%9f%e0%af%80%e0%ae%9a%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%ae%a9-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%88-%e0%ae%a8%e0%af%80%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bfடெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில், 2000 சிசி மற்றும் அதற்கும் கூடுதலான கொள்ளளவு கொண்ட வாகனங்களின் விற்பனைக்கு, 8 மாதங்களுக்கு முன்பு தடை விதிக்கப்பட்டது. சமீபத்தில் தான், உச்ச நீதிமன்றம் மூலம் இந்த தடை விலக்கி கொள்ளப்பட்டது.
டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மிக வேகமாக மாசு அடைந்து வருவதனால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
தடை விதிக்கப்பட்டிருந்த இந்த 8 மாதங்களில் ஏராளமான கார் நிறவனங்கள், மிகப்பெரிய அளவில் விற்பனை இழக்க நேரிட்டது. இதனால், ஆட்டோமொபைல் துறையில் பல நூறு கோடி ரூபாய் நஷ்டமும் ஏற்பட்டது.
தற்போது, தடை விலக்கி கொள்ளப்பட்டதனால், டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில், விற்பனைக்கு வரக்கூடிய மாடல்களின் விவரங்ககளை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.


தீர்வு;

2000 சிசி மற்றும் அதற்கும் கூடுதலான கொள்ளளவு கொண்ட வாகனங்களின் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடைக்கு பதிலாக, விற்கப்படும் கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகளில், 1% கூடுதல் சுற்றுசூழல் செஸ் (Environment Cess) எனப்படும் கூடுதல் வரி செலுத்தப்பட வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டது.
இதனால், ஆறுதல் அடைந்த நிறுவனங்கள், பழையபடி தாங்கள் விற்று வந்த மாடலை, மீண்டும் விற்பனை செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.


ஆடி இந்தியா;

ஏ8 எல்டபுள்யூபி 50 டிடிஐ, 60 டிடிஐ – 2967 சிசி/4,134 சிசி
க்யூ5 45 டிடிஐ – 2967 சிசி
க்யூ7 – 2967 சிசி


பிஎம்டபுள்யூ இந்தியா;

5-சீரிஸ் 530டி எம் ஸ்போர்ட் – 2,993 சிசி
6-சீரிஸ் 640டி – 2,993 சிசி
7-சீரிஸ் 730டி – 2,993 சிசி
எக்ஸ்3 எக்ஸ்டிரைவ் 30டி எம் ஸ்போர்ட் – 2,993 சிசி
எக்ஸ்5 – 2,993 சிசி
எக்ஸ்6 – 2,993 சிசி


ஃபோர்டு இந்தியா;

என்டெவர் 2.2-லிட்டர், 3.2-லிட்டர் – 2,198 சிசி/3,198 சிசி


ஃபோர்ஸ் மோட்டார்ஸ் இந்தியா;

ஃபோர்ஸ் ஒன் – 2,149 சிசி


ஜெனெரல் மோட்டார்ஸ்;

கேப்டிவா – 2,231 சிசி
ட்ரெயில்பிளேசர் – 2,776 சிசி


ஹூண்டாய் மோட்டார் இந்தியா;

சான்ட்டா பீ – 2,199 சிசி


இசுஸு இந்தியா;

எம்யூ7 – 2,999 சிசி


ஜாகுவார்;

எக்ஸ்ஜே எல்டபுள்யூடி லக்சுரி – 2,993 சிசி


லேண்ட்ரோவர் இந்தியா;

டிஸ்கவரி ஸ்போர்ட் – 2,179 சிசி
ரேஞ்ச்ரோவர் இவோக் – 2,179 சிசி
ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் – 2,993 சிசி
ரேஞ்ச்ரோவர் – 3.0-லிட்டர், 4.4-லிட்டர் – 2,993 சிசி/4,367 சிசி
டிஸ்கவரி – 2,993 சிசி


மஹிந்திரா;

தார் டிஐ, சிஆர்டிஇ – 2,498 சிசி /2,523 சிசி
ஸ்கார்பியோ – 2,179 சிசி
ஸைலோ – 2,179 சிசி
எக்ஸ்யூவி500 – 2,179 சிசி
பொலிரோ – 2,523 சிசி


மஸராட்டி இந்தியா;

கிப்லி – 2,987 சிசி
க்வார்ட்டோபோர்ட்டே – 2,987 சிசி


மெர்சிடிஸ் பென்ஸ்;

ஏ-கிளாஸ் ஏ 200டி – 2,143 சிசி
பி-கிளாஸ் பி 200டி – 2,143 சிசி
சி-கிளாஸ் 200டி, 250டி – 2,143 சிசி
சிஎல்ஏ 200டி – 2,143 சிசி
இ-கிளாஸ் இ 250டி, 250டி – 2,143 சிசி /2,987 சிசி
ஜிஎல்ஏ 200டி – 2,143 சிசி
ஜிஎல்சி – 220டி – 2,143 சிசி
ஜிஎல்இ 250டி, 350டி – 2,143 சிசி /2,987 சிசி
ஜிஎல்எஸ் 350டி – 2,987 சிசி
எஸ்-கிளாஸ் எஸ்350டி – 2,987 சிசி


மிட்சுபிஷி;

பஜெரோ ஸ்போர்ட் – 2,477 சிசி


போர்ஷே இந்தியா;

மசான் – 2,967 சிசி
கேயேன் டீசல் – 2,967 சிசி
கேயேன் எஸ் டீசல் – 4,134 சிசி
பனமிரா டீசல் – 2,967 சிசி


டாடா மோட்டார்ஸ்;

சஃபாரி – 2,179 சிசி
சஃபாரி ஸ்ட்ராம் – 2,179 சிசி
ஸெனான் – 2,179 சிசி
ஆரியா – 2,179 சிசி
சுமோ கோல்டு – 2,179 சிசி


டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார்ஸ்;

இன்னோவா க்ரிஸ்ட்டா – 2.4-லிட்டர், 2.8-லிட்டர் – 2,393 சிசி/2,755 சிசி
ஃபார்ச்சூனர் – 2.5-லிட்டர், 3.0-லிட்டர்- 2,494 சிசி/2,982 சிசி
லேண்ட் க்ரூஸர் பிரடோ – 2,982 சிசி
லேண்ட் க்ரூஸர் – 4,461 சிசி


வால்வோ இந்தியா;

எஸ்60 இன்ஸ்கிரிப்ஷன் – 2,400 சிசி
எஸ்60 கிராஸ் கண்ட்ரி இன்ஸ்கிரிப்ஷன் – 2,400 சிசி
எக்ஸ்சி60 இன்ஸ்கிரிப்ஷன் – 2,400 சிசி
எஸ்80 இன்ஸ்கிரிப்ஷன் – 2,400 சிசி

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply