டில் கீரை ஃபலாஃபல் சாண்ட்விச்

Loading...

%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e2%80%89%e0%ae%95%e0%af%80%e0%ae%b0%e0%af%88-%e0%ae%83%e0%ae%aa%e0%ae%b2%e0%ae%be%e0%ae%83%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e2%80%89%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a3%e0%af%8dவெள்ளை கொண்டைகடலை – 200 கிராம்,
டில் கீரை – ஒரு கட்டு (டில் கீரை இல்லை என்றால் கொத்தமல்லி தழை, சிறிது பாலக்கும் சேர்த்து கொள்ளலாம்),
பூண்டு – 3 பல், சீரகம் – 1 டேபிள்ஸ்பூன்,
வெள்ளை எள் – 1 ½ டீஸ்பூன் + 1½ டீஸ்பூன்,
வெங்காயம் – 1, உப்பு – தேவைக்கு,
பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் – 1 (பெரியது).

டிப்பிங் சாஸ்…

மேயனைஸ் – 3 டேபிள்ஸ்பூன்,
பூண்டு – 1 பல்,
தயிர் – 1 டேபிள்ஸ்பூன்,
ஆலிவ் ஆயில் – சிறிது.

கொண்டை கடலையை இரவே ஊற வைக்கவும். டில் கீரையை அலசி பொடியாக நறுக்கவும். சீரகத்தை வறுக்கவும். ஊறிய கொண்டைகடலையுடன் கீரை, வறுத்த சீரகம், வெங்காயம், பச்சைமிளகாய், வறுத்த எள்ளில் பாதி, பேக்கிங் பவுடர், பூண்டு, உப்பு சேர்த்து முக்கால்பதம் வரை அரைக்கவும். அரைத்ததில் மீதி எடுத்து வைத்த வறுத்த எள் சேர்த்து சிறிய லெமன் அளவு பந்து போல் உருட்டி தட்டி போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான டில் கீரை ஃபலாஃபல் ரெடி.

டிப்பிங் சாஸ் செய்முறை…

அனைத்து பொருட்களையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். சாண்ட்விச் மேலே அலங்கரிக்க… ரெடிமேட் குபூஸ் அல்லது பன், சீஸ் ஸ்லைஸ், லெட்டியுஸ், துருவிய கேரட், துருவிய வெள்ளரிக்காய், மேயனைஸ் அனைத்தும் சிறிது. பன் அல்லது குபூஸில் சிறிது மேயனைஸ் தடவி 2 ஃபலாஃபல்களை வைத்து மேலே சீஸ் ஸ்லைஸ் மற்றும் கேரட், லெட்யூஸ், வெள்ளரிக்காய் வைத்து மூடவும். சுவையான ஃபில்லிங்கில் ஃபலாஃபல் சாண்ட்விச் ரெடி

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply