டாடா ஹெக்ஸா எஸ்யூவி இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் அறிமுகம்

Loading...

%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%b9%e0%af%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d%e0%ae%af%e0%af%82%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாரிக்கும் டாடா ஹெக்ஸா எஸ்யூவி, இந்தியாவில் வரும் அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டாடா ஹெக்ஸா எஸ்யூவி தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.


டாடா ஹெக்ஸா…

டாடா ஹெக்ஸா எஸ்யூவி, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உருவாக்கும் சிறப்பான மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்படும் மாடல்களில் ஒன்றாக உள்ளது. இது ஆரியா எம்பிவி மாடலுக்கு மாற்றாக அமைய உள்ளது.அறிமுகம்;

பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள், தங்களின் தயாரிப்புகளை, தசரா அல்லது தீபாவளி போன்ற பண்டிகை காலங்களின் போது இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகின்றனர்.
அந்த அடிப்படையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் தங்களின் டாடா ஹெக்ஸா எஸ்யூவியை, இந்த பண்டிகை காலங்களின் போது அறிமுகம் செய்ய உத்தேசித்துள்ளது.


அறிமுகத்திற்கான தாமதம்;

டாடா ஹெக்ஸா எஸ்யூவி, முன்னதாக இந்த ஆண்டின் துவக்கத்திலேயே அறிமுகம் செய்யப்படுவதாக இருந்தது.
ஆனால், டெல்லி மற்றும் அதனை சுற்றிலும் உள்ள பகுதிகளில் டீசல் வாகனங்களுக்கான தடை விதிக்கப்பட்டிருந்ததால், இதன் அறிமுகம் தாமதம் ஆனது.


சோதனைகள்;

டாடா ஹெக்ஸா எஸ்யூவி, முன்னதாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் தான் முதன் முதலில் காணப்பட்டது.
அதன் பின்னர், டாடா ஹெக்ஸா எஸ்யூவியின் சோதனைகள் அவ்வப்போது நிகழ்த்தப்பட்டு வருகிறது.


இஞ்ஜின்;

டாடா ஹெக்ஸா எஸ்யூவிக்கு, ஃசபாரி ஸ்டார்ம் மாடலின் டாப் என்ட் வேரியன்ட்டில் பொருத்தபட்டுள்ள அதே 2.2 லிட்டர் வேரிகார் 400 டீசல் இஞ்ஜின் தான் பொருத்தப்பட உள்ளது.
இந்த இஞ்ஜின், 154 பிஹெச்பியையும், 400 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் உடையதாக இருக்கும்.


கியர்பாக்ஸ்;

டாடா ஹெக்ஸா எஸ்யூவியின் இஞ்ஜின் 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுடன் வெளியாகும் என என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


டிசைன்;

டிசைன் படி, டாடா ஆரியா எம்பிவி மாடலுக்கு மாற்றாக அமையும் இந்த டாடா ஹெக்ஸா எஸ்யூவி, ஆரியா எம்பிவியை காட்டிலும் அதிக கட்டுமஸ்தான தோற்றம் கொண்டுள்ளது.
இந்த ஆங்குளார் ஹெட்லேம்ப்கள் கிரில்லின் பக்கவாட்டில் உள்ளன. இந்த கிரில்லின் மத்தியில் தான் டாடா நிறுவனத்தின் பேட்ஜ் உள்ளது.
மேலும், இந்த கிரில்லின் அடியில், பெரிய பம்பரின் பாகமாக விளங்கும் பெரிய ஏர் டேம் உள்ளது.


பக்கவாட்டு டிசைன்;

டாடா ஹெக்ஸா எஸ்யூவியின் பக்கவாட்டில், பெரிய வீல் ஆர்ச்களின் அடியில் பெரிய அள்ளி வீல்கள் உள்ளன.


பின்பக்க டிசைன்;

டாடா ஹெக்ஸா எஸ்யூவியின் பின்பக்கத்தில், டெயில் லேம்ப்பை சுற்றி, பெரிய குரோம் ஸ்ட்ரிப்கள் மூலம் இணைக்கப்பட்ட மெல்லிய போர்த்தல் படுகை உள்ளது.
இது, இந்த டாடா ஹெக்ஸா எஸ்யூவிக்கு மேலும் பிரிமியம் தோற்றம் அளிக்கிறது.


வகைப்படுத்தல்;

டாடா ஹெக்ஸா எஸ்யூவி, ஃசபாரி ஸ்டார்ம் மாடளுக்கும் மேலாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.


போட்டி;

டாடா ஹெக்ஸா எஸ்யூவி, மஹிந்திரா எக்ஸ்யூவி 5OO மாடலிடம் இருந்து போட்டியை எதிர்க்கொள்ள வேண்டி இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply