டாடா ஸெஸ்ட் ஸ்போர்ட்ஸ் எடிஷன் அறிமுகம்

Loading...

%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%b8%e0%af%86%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%8eடாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாரிக்கும் டாடா ஸெஸ்ட் ஸ்போர்ட்ஸ் எடிஷன் அறிமுகம் செய்யபட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய வாகன சந்தைகளில் மிகப்பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனமாக உள்ளது. சமீபத்தில் தான், டாடா மோட்டார்ஸ் நிறுவனம், தங்களின் ஸெஸ்ட் காம்பேக்ட் செடான் மாடலில் 50,000 கார்களை விற்பனை செய்த சாதனையை பதிவு செய்தது. ஸெஸ்ட் காம்பேக்ட் செடான், இந்த சாதனையை பதிவு செய்ய சுமார் 2 வருட காலம் எடுத்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக டாடா மோட்டர்ஸ் நிறுவனம் ஸெஸ்ட் மாடலில் ஸ்போர்ட்ஸ் எடிஷன் அறிமுகம் செய்துள்ளனர். இந்த ஸ்போர்ட்ஸ் எடிஷன், டாடா ஸெஸ்ட் மாடலின் அனைத்து வேரியன்ட்களிலும் கிடைக்கும். இந்த டாடா ஸெஸ்ட் ஸ்போர்ட்ஸ் எடிஷன் மாடலானது கூடுதல் விலையில் தான் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் தாங்கல் தேர்வு செய்யும் மாடலுக்கு கூடுதலாக, இது ஆக்சஸரீஸ் போலவே வழங்கப்படும். இதனுடன், ஸ்போர்டியான பாடி கிட், கிராஃபிக்ஸ், ரெயின் வைசர், மற்றும் அள்ளி வீல்களும் உள்ளது. இதன் பம்பர் முனைகள், ஸ்கர்ட்கள் மற்றும் ரியப் பம்பர்கள் உள்ளிட்டவை ரெட் நிறத்தில் உள்ளன. இதன் ஓஆர்விஎம்-களுக்கும் ரெட் கேப் சேர்க்கபட்டுள்ளதால், டாடா ஸெஸ்ட் ஸ்போர்ட்ஸ் எடிஷன் கூடுதல் ஸ்போர்ட்டியான தோற்றம் பெறுகிறது. மேலும், ரெட், கிரே மற்றும் பிளாக் ஆகிய 3 வண்ணங்களிலான ஸ்டிக்கர் இரண்டு டோர்களின் மீதும் ஒட்டப்பட்டுள்ளது. டாடா ஸெஸ்ட் ஸ்போர்ட்ஸ் எடிஷன் மாடலானது, ஈர்க்கும் வகையிலான ஆதாயங்கள் மற்றும் சலுகைகளுடன் வழங்கப்படுகிறது. எக்ஸ்சேஞ்ச் போனஸ் என்ற அடிப்படையில் 30,000 ரூபாய் சலுகையும், 33,000 ரூபாய் மதிப்பிலான இலவச இன்சூரன்ஸ் ஆகியவை கிடைக்கும். ஒட்டுமொத்தமாக, டாடா ஷோரூம்கள் 68,000 ரூபாய் மதிப்பிலான சலுகைகளை அளிக்கின்றன. மேலும், இஎம்ஐ தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 3,999 ரூபாய் முதல் கடன் வசதி கிடைக்கிறது. டாடா ஸெஸ்ட் ஸ்போர்ட்ஸ் எடிஷன் மாடலுக்கு, 1.2-லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3-லிட்டர் டீசல் இஞ்ஜினும் பொருத்தப்படுகிறது. இந்த 2 இஞ்ஜின்களுமே ஸ்டாண்டர்ட் 5-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டிருக்கும். கூடுதலாக, டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இந்த டாடா ஸெஸ்ட் ஸ்போர்ட்ஸ் எடிஷன் மாடலுக்கு, தேர்வு முறையிலான ஏஎம்டி-யையும் அளிக்கின்றனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply