டாடா டியாகோ ஹேட்ச்பேக் காரின் விலை உயர்கிறது

Loading...

%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%af%8b-%e0%ae%b9%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95அண்மையில் ரிலீஸாகி கபாலி ரேஞ்சுக்கு வசூல் எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு ஹேட்ச்பேக் மாடல் டாடா டியாகோ. ரூ.1 லட்சத்துக்கு நானோ காரை அறிமுகப்படுத்தி விற்பனையில் மாஸ் காட்டிய டாடா நிறுவனம், தற்போது அந்த சாதனையை டியாகோ காரின் வாயிலாக முறியடித்து விடும் போலிருக்கிறது. நாளுக்கு நாள் பெருகி வரும் வரவேற்பு, வாடிக்கையாளர்களின் ஆதரவு ஆகியவையே அதற்கு சான்றாக விளங்குகின்றன. கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 4,205 டியாகோ கார்கள் விற்பனையாகியுள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இப்போது விஷயம் என்னவென்றால், டியாகோவின் விலை சற்று உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாம் டாடா நிறுவனம். அடப் போங்கப்பா…. விற்பனை அதிகமா இருந்தா, உடனே விலையை ஏத்திடுவீங்களே என நீங்கள் சலித்துக் கொள்வது புரிகிறது. ஆனால், இந்த விலை உயர்வு நடுத்தர மக்களால் ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவாகத்தான் தெரிகிறது. அதாவது ரூ.6000 முதல் ரூ.8000 வரை டியாகோ மாடலின் விலையை அதிகரிக்கப் போகிறதாம் டாடா நிறுவனம். அதுவும் சில நிர்வாகக் காரணங்களுக்காக. அறிமுகமான தேதியில் இருந்து இதுவரை 40,000 புக்கிங்குகள் டியாகோவுக்கு வந்துள்ளன. அதில் அதிகமானவை பெட்ரோல் மாடல்களுக்குத்தான். புக்கிங்குகள் அதிகரித்ததால், கார்களை டெலிவரி செய்தற்கான காத்திருப்புக் காலத்தையும் நீட்டித்துள்ளது டாடா நிறுவனம். அப்படி என்னதான் இருக்கிறது அந்த மாடலில்… இதோ டியாகோவில் உள்ள சிறப்பம்சங்கள் உங்களுக்காக ஓர் சிறிய அறிமுகம்… டிசைனை எடுத்துக் கொண்டால் டியாகோ மாடல் பிரீமியம் லுக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எஞ்சின் திறனைப் பொருத்தவரை, டாடா டியாகோவில் 1.2 லிட்டர் திறன் 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 84 பிஎச்பி திறன், 115 என்எம் டார்க்கை வெளியேற்றும் ஆற்றல் கொண்டது. அதேபோல் 1.5 லிட்டர் திறன் கொண்ட டீசல் எஞ்சின் மாடலும் வந்துள்ளது. இந்த இரண்டு மாடல்களிலும் 5 கியர்கள் உள்ளன. ஆட்டோமேடிக் கியர் ஆப்ஷனும் உள்ளது. இதைத் தவிர சிறப்பம்சங்கள் என எடுத்துக் கொண்டால், 2 ஏர் பேக்-கள், சென்டரல் லாக் சிஸ்டம், ஆடியோ சிஸ்டம், யுஎஸ்பி, புளூடுத் வசதி, பவர் விண்டோஸ் ஆகியவை டியாகோவில் உள்ளன. டாடா டியாகோ காரின் விலை ரூ.3.20 லட்சத்திலிருந்து தொடங்குகிறது (தில்லி எக்ஸ் ஷோ ரூம் விலை). தற்போது அந்த விலையில் இருந்துதான் ரூ.8000 வரை உயர்த்தப்படவுள்ளது. இந்த விலையேற்றம் இதோடு நின்றுவிட்டால் பரவாயில்லை. வாடிக்கையாளர்களின் வரவேற்பைக் காரணம் காட்டி மேலும் விலையை உயர்த்தினால், அதன் விளைவு விற்பனையை பாதிக்கும் என்பதில் மாற்றமில்லை.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply