டாடா கைட் 5 காம்பேக்ட் செடான் 2017-ல் இந்தியாவில் அறிமுகம்

Loading...

%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%95%e0%af%88%e0%ae%9f%e0%af%8d-5-%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%95%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%9fடாடா மோட்டார்ஸ் நிறுவனம் தங்களின் டாடா கைட் 5 காம்பேக்ட் செடான் காரை இந்திய வாகன சந்தைகளில் 2017-ல் தான் அறிமுகம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இந்த 2016-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இது வரை, டியாகோ ஹேட்ச்பேக்கை மட்டுமே அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில் அறிமுகம் தாமாதப்படுத்தப்பட்ட டாடா கைட் 5 காம்பேக்ட் செடான் குறித்த கூடுதல் தகவல்களை இனி தெரிந்து கொள்ளலாம்.

அறிமுகம்;
டாடா கைட் 5 காம்பேக்ட் செடான், முன்னதாக 2016-ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படுவதாக இருந்தது. ஆனால், இப்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இதன் அறிமுகத்தை 2017-ல் தான் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

புகழ்பெற்ற மாடல்;
டாடா கைட் 5 காம்பேக்ட் செடான், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிபடுத்தப்பட்டது. அப்போதில் இருந்து, இது மக்களிடம் மிகுந்த புகழ்பெற்ற மாடலாக இருந்து வருகிறது.

டிசைன்;
டாடா கைட் 5 காம்பேக்ட் செடான், டாடா டியாகோ ஹேட்ச்பேக்கை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பின்புற டிசைன், இந்தியாவில் உள்ள பிற காம்பேக்ட் செடான்களை காட்டிலும் தனித்து பிரத்யேகமாக காணப்படுகிறது. டாடா கைட் 5 காம்பேக்ட் செடான் மற்றும் டாடா ஹேட்ச்பேக் மாடல்களுக்கு இடையே பல்வேறு ஒற்றுமைகளும் உள்ளது.

இஞ்ஜின்;
டாடா கைட் 5 காம்பேக்ட் செடானில், டாடா டியாகோவில் உள்ளது போன்ற இஞ்ஜின் அமைப்புகள் உள்ளது. டாடா கைட் 5, பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் டீசல் இஞ்ஜின் ஆகிய 2 இஞ்ஜின் தேர்வுகளுடன் வெளியாகிறது.

கியர்பாக்ஸ்;
ஆரம்ப கட்டத்தில், டாடா கைட் 5 காம்பேக்ட் செடான், 5-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுடன் மட்டுமே வெளியாகிறது. ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு கொண்ட டாடா கைட் 5 காம்பேக்ட் செடான், பின்னர் வெளியாகும் என செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply