டாடா கைட் 5 காம்பேக்ட் செடானின் புதிய ஸ்பை படங்கள் வெளியாகியது – முழு விவரம்

Loading...

%e0%ae%9f%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be-%e0%ae%95%e0%af%88%e0%ae%9f%e0%af%8d-5-%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%95%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%9fடாடா கைட் 5, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உருவாக்கி வரும் காம்பேக்ட் செடான் கார் ஆகும். டாடா கைட் 5 காம்பேக்ட் செடானின் ஸ்பை படங்கள் அவ்வபோது வெளியாகி கொண்டே இருக்கிறது. சமீபத்தில் கூட சோதனைகள் செய்யும் போது வெளியாகிய படங்களை தாண்டி, தயாரிப்பு நிலை மாடலின் ஸ்பை படங்களும் வெளியாகியது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பல்வேறு புதிய தயாரிப்புகளை காட்சிப்படுத்தியது. இதில் டாடா கைட் 5 காம்பேக்ட் செடானும் ஒன்றாகும். தற்போது வெளியாகியுள்ள ஸ்பை படங்களில், இதன் ஹெட்லைட்கள் மற்றும் டெயில் லேம்ப்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. தற்போது ஸ்பை படங்கள் வெளியாகியுள்ள டாடா கைட் 5 காம்பேக்ட் செடான் தொடர்பான பல்வேறு தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.
டாடா கைட் 5 காம்பேக்ட் செடான்…
டாடா கைட் 5 காம்பேக்ட் செடான், பழையதாகி கொண்டிருக்கும் இண்டிகோ இசிஎஸ் மாடலுக்கு மாற்றாக வெளியாகிறது. 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட பல்வேறு தயாரிப்புகளில், டாடா கைட் 5 காம்பேக்ட் செடான் தான் முதலில் வெளியாகும் மாடலாக இருக்கும். டாடா கைட் 5 காம்பேக்ட் செடான், டியாகோ ஹேட்ச்பேக்கை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
டிசைன்;
டியாகோ ஹேட்ச்பேக்கை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள டாடா கைட் 5 காம்பேக்ட் செடான், அத்துடன் பல்வேறு ஒருமைப்பாடுகளை கொண்டுள்ளது. பல்வேறு டிசைன் அம்சங்கள் இரு மாடல்களுக்கும் இடையே பகிரப்பட்டுள்ளது. ஒரே ஒரு முக்கியமான வேற்றுமை என்பது, இதன் பூட்டில் தான் உள்ளது. டாடா கைட் 5 காம்பேக்ட் செடான், ஆர்ச் வடிவிலான பூட் கொண்டுள்ளது. மற்றபடி, டியாகோ ஹேட்ச்பேக்கில் காணப்படும் அதே ஹெட்லைட்கள் மற்றும் டெயில் லேம்ப்கள் தான் புதிய டாடா கைட் 5 காம்பேக்ட் செடானிலும் பயன்படுத்தபட்டுள்ளது.
இஞ்ஜின்;
டாடா கைட் 5 காம்பேக்ட் செடானில், டியாகோ ஹேட்ச்பேக்கின் அதே ஸ்டாண்டர்ட் இஞ்ஜின்கள் தான் பொருத்தபட்டுள்ளது. இதில் உள்ள, 1.2 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 1.05 லிட்டர் டீசல் இஞ்ஜின்களில் இருந்து வாடிக்கையாளர்கள், தங்களுக்கு பிடித்த இஞ்ஜின் மாடலை தேர்வு செய்து கொள்ளலாம்.
கியர்பாக்ஸ்;
டாடா கைட் 5 காம்பேக்ட் செடானின் 2 இஞ்ஜின்களுமே 5-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கபட்டிருக்கும். இதற்கான ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு, பின்னர் வெளியாகும்.
பூட் ஸ்பேஸ்;
இதன் போட்டி மாடல்களுக்கு மத்தியில், டாடா கைட் 5 காம்பேக்ட் செடான் மிக அதிகமான பூட் ஸ்பேஸ் கொண்டுள்ளது. டாடா கைட் 5, சுமார் 420 லிட்டர் என்ற அளவிலான பூட் ஸ்பேஸ் கொண்டுள்ளது. இது 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு போதுமானதாக இருக்கும்.
பிற காம்பேக்ட் செடான்;
டாடா மோட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பல்வேறு மாடல்களில், டாடா செஸ்ட் காம்பேக்ட் செடானும் தற்போது விற்பனையில் உள்ளது. ஆனால், இது எதிர்பார்த்த அளவிற்கு விற்பனையில் வெற்றி பெறவில்லை.
அறிமுகம்;
டாடா மோட்டர்ஸ் நிறுவனம், இந்த டாடா கைட் 5 காம்பேக்ட் செடானை இந்த ஆண்டு பண்டிகை காலங்களின் போது அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply