டட்சன் கோ கிராஸ் எஸ்யூவியின் இந்திய அறிமுகம் உறுதியானது – முழு விபரம்

Loading...

%e0%ae%9f%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d%e0%ae%af%e0%af%82%e0%ae%b5%e0%ae%bfடட்சன் கோ கிராஸ் எஸ்யூவி, 2017-ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகின்றன. டட்சன் கோ கிராஸ் எஸ்யூவி, ஜப்பானின் நிஸான் நிறுவனத்திற்கு சொந்தமான டட்சன் நிறுவனம் தயாரிக்கும் மாடல் ஆகும். டட்சன் நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தியாவில் வேகமாக பிரபலமாகி வருகிறது. சமீபத்தில் தான் டட்சன் ரெடி-கோ மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது இந்திய வாடிக்கையாளர்கள் இடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளது. டட்சன் கோ கிராஸ் எஸ்யூவி தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.
அறிமுகம்;
டட்சன் கோ கிராஸ் எஸ்யூவி, முன்னதாக 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட் வடிவில் காட்சிபடுத்தப்பட்டது. அப்போது, இதற்கு கிடைத்த அபாரமான வரவேற்பின் காரணமாக, டட்சன் நிறுவனம், டட்சன் கோ கிராஸ் எஸ்யூவியின் உற்பத்தி நிலை மாடலை விரைந்து அறிமுகம் செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. டட்சன் கோ கிராஸ் மாடலின் அறிமுகம் குறித்து அவ்வபோது தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. டட்சன் நிறுவனத்தின் டட்சன் கோ கிராஸ் எஸ்யூவி, 2017 இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படலாம்.
இஞ்ஜின்;
டட்சன் கோ கிராஸ் எஸ்யூவி, 1.2 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டிடிசிஐ டீசல் இஞ்ஜின் கொண்டுள்ளது. இதே இஞ்ஜின் தான் நிஸான் மைக்ரா ஹேட்ச்பேக்கிலும் பொருத்தபட்டுள்ளது.
தோற்றம்;
கான்செப்ட் வடிவில் காட்சிபடுத்தப்பட்ட டட்சன் கோ கிராஸ் எஸ்யூவி, பிரத்யேகமாக காட்சியளிக்கும் முன் தோற்றம் கொண்டுள்ளது. இதன் முன் பக்கத்தில், ஹெக்சாகனல் கிரில், எல்இடி ஹெட்லைட்கள், தடித்த மற்றும் திடமான ஸ்கிட் பிளேட்கள் மற்றும் பிளாக் பிளாஸ்டிக் கிளாட்டிங் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் உள்ளன.
5-சீட்டர்;
டட்சன் கோ கிராஸ் மாடலின் கான்செப்ட், புதிய டேஷ்போர்ட் மற்றும் 5-சீட்டர் அமைப்பு கொண்டிருந்தது.
வருங்கால மேம்பாடு;
சந்தைகளில் இருந்து கிடைக்கும் கருத்துகளை பொருத்து, டட்சன் கோ கிராஸ் எஸ்யூவி, 7-சீட்டர் அமைப்பு கொண்டதாக மாற்றப்படுமா என பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
போட்டி;
டட்சன் கோ கிராஸ் எஸ்யூவி, இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில், ஹூண்டாய் ஆக்டிவ் ஐ20, டொயோட்டா எட்டியாஸ் கிராஸ் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போட வேண்டி இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply