டட்சன் கார்கள் இனி முப்படைகளின் சிஎஸ்டி கேண்டீன்களிலும் கிடைக்கும்

Loading...

%e0%ae%9f%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aaடட்சன் நிறுவனத்தின் கார்கள், இனி சிஎஸ்டி அல்லது கேண்டீன் ஸ்டோர்ஸ் டிபார்ட்மெண்ட் (Canteen Stores Department (CSD)) எனப்படும் முப்படைகளுக்கான கேண்டீன்களிலும் கிடைக்கும். டட்சன் நிறுவனம், ஜப்பானை சேர்ந்த நிஸான் நிறுவனத்தின் கீழ் இயங்கும் நிறுவனம் ஆகும். இந்த சிஎஸ்டி என்பது, ராணுவம், கப்பற்படை மற்றும் விமானப்படை உள்ளிட்டவற்றை சேர்ந்த இந்நாள் மற்றும் முன்னாள் பணியாளர்களுக்காக பிரத்யேகமாக இயங்கும் விற்பனை மையங்களாக செயல்படுகின்றன. இந்த டட்சன் கார்கள் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சிஎஸ்டி மையங்களிலும் விற்பனைக்கு கிடைக்கும். இந்த வகையில் டட்சன் நிறுவனத்தின் ரெடி-கோ மற்றும் கோ+ ஆகிய மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கும். டட்சன் நிறுவனம், இந்த சிஎஸ்டி மையங்கள் மூலம் முப்படையினருக்கும், அவர்களது குடும்பத்தினர்களுக்கும், இந்த ரெடி-கோ மற்றும் கோ+ மாடல்கள் மீது ஸ்பெஷல் சலுகைகளை வழங்குகின்றனர். இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக டட்சன் நிறுவனம், இந்த வாடிக்கையாளர்களுக்கு, பிரயாரிட்டி டெலிவரி எனப்படும் டெலிவரியில் முன்னுரிமை, வேட் வரி விலக்கு, எக்ஸ்க்ளூசிவ் ஆஃபர்கள் மற்றும் பிற டட்சன் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் அனைத்து சலுகைகளும் இந்த சிஎஸ்டி மையங்கள் மூலம் வழங்கப்படும். இந்த புதிய ஏற்பாடுகள் குறித்து, நிஸான் இந்தியா நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டரான அருன் மல்ஹோத்ரா மிகுந்த பெருமிதத்தை வெளிப்படுத்தினார். மேலும், “அனைத்து தரப்பு டட்சன் வாடிக்கையாளர்களுக்கும், ஒட்டுமொத்த பிராண்ட் அனுபவத்தை மேம்படுத்துவதே எங்களின் முக்கியமான நோக்கம் ஆகும். இது போல், எங்களின் நிஸான் மற்றும் டட்சன் கார்களின் விற்பனை நடவடிக்கைகளை, எக்ஸ்க்ளூசிவ் மற்றும் சிறப்பு சலுகைளுடன் சிஎஸ்டி மையங்களுக்கும் விரிவுபடுத்துவது மூலம், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த கார்களை இன்னும் சுலபமாக வாங்கி மகிழ வாய்ப்புகள் கிடைக்கிறது” என அருன் மல்ஹோத்ரா தெரிவித்தார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply