ஜிஎஸ்டி வரி ஆட்டோ மொபைல் துறைக்கு எந்த அளவுக்கு பலனளிக்கும்

Loading...

%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%8b-%e0%ae%ae%e0%af%8a%e0%ae%aa%e0%af%88%e0%ae%b2%e0%af%8dஎந்தப் பேப்பரைப் புரட்டினாலும், ஜிஎஸ்டி வரி, சரக்கு – சேவை வரி என்றுதான் வருகிறது. அந்த வரி தொடர்பான மசோதா மாநிலங்களவையில் அமல்படுத்தப்பட்டது வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவிக்கிறார். அமெரிக்கா, சீனா என உலக வல்லரசு நாடுகள் எல்லாம் இந்தியாவைப் பாராட்டுகின்றன. அப்படி என்னதான் அந்த ஜிஎஸ்டி வரியில் உள்ளது? ஆட்டோ மொபைல் துறைக்கு அதனால் என்ன லாபம்?… இந்த கேள்விகள் பெரும்பாலானோரின் மனதில் எழுகின்றன. அதற்கான விடையை டிரைவ் ஸ்பார்க் தருகிறது உங்களுக்காக… முதலில் சரக்கு – சேவை வரி, அதாவது ஜிஎஸ்டி வரி என்றால் என்ன? என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் வெவ்வேறு விகிதத்தில் வரி விதிப்பு முறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் ஒரு மாநிலத்தில் தொழிற்சாலையை வைத்திருக்கும் ஓர் ஆட்டோ மொபைல் நிறுவனம், தான் தயாரித்த கார்களை இன்னொரு மாநிலத்தில் விற்பனை செய்ய வேண்டுமென்றால் தனித்தனியே வரி செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. மேலும் சரக்குகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்வதற்கான சரக்கு பரிமாற்றத்திற்கான தனி வரி (லாஜிஸ்டிகஸ் வரி) செலுத்த வேண்டும். இதையெல்லாம் ரத்து செய்துவிட்டு நாடு முழுவதும் ஒரே சீரான வரியை விதிக்க வகை செய்யும் மசோதாதான் ஜிஎஸ்டி. இந்த சட்டம் மூலம் 17 வகையான மறைமுக வரி விதிப்புகள் ரத்தாகும். மேலும் பொருள்களை விற்பனை செய்யும்போது பிடித்தம் செய்யப்படும் மத்திய விற்பனை வரி 2 சதவீதம் திருப்பித் தரப்படும். மொத்த வரி விகிதம் 18 சதவீதத்துக்குள் அடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தனை சாதக அம்சங்கள் இருப்பதால், அதிலும் குறிப்பாக வரி குறைவதால் பொருள்களின் விலையும் குறையும். ஆட்டோ மொபைல் துறையில் கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்கள் மற்றும் டூ வீலர்களின் விலை குறைய வாய்ப்புள்ளது. இதனால் மார்க்கெட்டில் ஆரோக்கியமான போட்டி நிலவும் என எதி்ர்பார்க்கப்படுகிறது. இந்திய ஆட்டோ மொபைல் உற்பத்தியாளர்கள் அமைப்பின் (எஸ்ஐஏஎம்) தலைவர் விஷ்ணு மாத்தூர் கூறுகையில், ஜிஎஸ்டி மசோதாவால் ஆட்டோ மொபைல் துறைக்கு நல்ல பலன் கிடைக்கும் என்றார். பல வகையான வரிவிதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிறுவனங்கள், இனி மேல் இரண்டு வகையான வரிகளுக்கு மேல் செலுத்தத் தேவையில்லை என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். ரெனால்ட் இந்தியாவின் தலைவர் ஸ்விஃப்ட் ஷாகெனி இதுதொடர்பாக கூறும்போது, ஜிஎஸ்டி வரி விதிப்பால் லாஜிஸ்டிக்ஸ் கட்டணங்கள் 30-இலிருந்து 40 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது என்றார். அதன் பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். நிப்பான் ஆடியோட்ரானிக்ஸ் நிறுவனத்தின் நிதித் துறை தலைவர் ஏ.கே.ரஸ்டோகி, இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார். மத்திய விற்பனை வரி 2 சதவீதம் திருப்பி வாங்கிக் கொள்ள ஜிஎஸ்டி மசாதாவில் வாய்ப்புள்ளது என்று தெரிவித்த அவர், ஆட்டோ மொபைல் துறைக்கு இது சாதகமான அம்சம் என்று தெரிவித்தார். மொத்தத்தில் ஜிஎஸ்டி வரி விதிப்பு அனைவரும் வரவேற்கும் ஒன்றாகவே இருக்கிறது. இதனால் இந்தியாவில் தொழில் முதலீடு அதிகரிக்கும் எனவும் நம்பப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply