ஜான் ஆப்ரஹாம் கேரேஜில் சேர்ந்த நிஸான் டெரானோ எஸ்யூவி

Loading...

%e0%ae%9c%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b0%e0%ae%b9%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%87%e0%ae%b0%e0%af%87%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9aநிஸான் இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸிடராக திகழும் ஜான் ஆப்ரஹாம் தனக்கென ஒரு நிஸான் டெரானோ எஸ்யூவியை பெற்று கொண்டுள்ளார். ஜப்பானை சேர்ந்த நிஸான் நிறுவனம், தங்களின் தயாரிப்புகளை பிரபலப்படுத்த பாலிவுட்டின் முன்னோடி நட்சத்திரங்களில் ஒருவரான ஜான் ஆப்ரஹாமை நியமித்து கொண்டுள்ளது. பிராண்ட் அம்பாஸிடராக உள்ளவர்களும், தாங்கள் பிரபலப்படுத்தும் பிராண்ட்களின் தயாரிப்புகளை சொந்தம் கொண்டு உபயோகிப்பது வழக்கமாக உள்ளது. அப்படி தான், ஜான் ஆப்ரஹாமும் ஒரு புதிய நிஸான் டெரானோ எஸ்யூவியை பெற்றுள்ளார். நிஸான் டெரானோ எஸ்யூவி குறித்த கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.
ஜான் ஆப்ரஹாம்…
ஜான் ஆப்ரஹாம், பாலிவுட் சினிமா உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். ஜான் ஆப்ரஹாம், ஃபிட்டான தோற்றத்திற்காகவும், அதிரடி ஆக்ஷன் நடிப்பிறகும் மிகுந்த புகழ் பெற்றுள்ளார். முன்னாள் மாடலாக இருந்த ஜான் ஜான் ஆப்ரஹாம், தூம், ஃபோர்ஸ், தேசி பாய்ஸ், ஹவுஸ்ஃபுல் மற்றும் டிஷூம் போன்ற ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
ஜான் ஆப்ரஹாமின் டெரானோ…
ஜான் ஆப்ரஹாம், சமீபத்தில் பெற்று நிஸான் டெரானோ எஸ்யூவி, பிளாக் நிறத்திலான கார் ஆகும். ஜான் ஆப்ரஹாமின் டெரானோ காரின் லைசன்ஸ் பிளேட் நம்பர், MH03 CB6467 ஆகும்.
உயர் அதிகாரி கருத்து;
ஜான் ஆப்ரஹாமிடம் இந்த நிஸான் டெரானோ எஸ்யூவியை, நிஸான் இந்தியாவின் உயர் அதிகாரி சஞ்ஜெய் குப்தா நேரில் ஒப்படைத்தார். அப்போது, “இந்த நிஸான் டெரானோ எஸ்யூவி, ஜான் ஆப்ரஹாமின் கார் கலெக்ஷனுக்கு கூடுதல் மதிப்பு கூட்டும் வகையிலான மாடலாக இருக்கும்” என சஞ்ஜெய் குப்தா தெரிவித்தார்.
ஜான் ஆப்ரஹாமின் முதல் கார்;
ஜான் ஆப்ரஹாமின் முதல் கார், ஒரு மாருதி சுஸுகி ஜிப்ஸி ஆகும். இவர், இந்த மாருதி சுஸுகி ஜிப்ஸி காரை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற கார்கள்;
இவற்றோடு மட்டுமல்லாமல், ஜான் ஆப்ரஹாம், லம்போர்கினி கல்லார்டோ, ஆடி க்யூ5, ஆடி க்யூ7 உள்ளிட்ட பல்வேறு கார்களை வைத்திருக்கிறார்.
பைக்குகள்;
எவ்வளவு தான் விலை உயர்ந்த கார்கள் வைத்திருந்தாலும், ஜான் ஆப்ரஹாமின் முதல் காதல், பைக்குகள் மீது தான் உள்ளது என்பது மறுக்கமுடியாத விஷமாகும். முன்னதாக, ஜான் ஆப்ரஹாம், யமஹா இந்தியாவின் பிராண்ட் அம்பாஸிடராக இருந்தார். பைக்குகள் மீது தீராத ஆசை கொண்ட ஜான் ஆப்ரஹாம், தனது கேரேஜில் யமஹா ஆர்டி350, யமஹா விமேக்ஸ், டுகாட்டி டயாவெல் மற்றும் கவாஸாகி இசட்இசட்ஆர்1400 உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களை கொண்டுள்ளார்.
இஞ்ஜின்;
நிஸான் டெரானோ எஸ்யூவி, ஒரே ஒரு 1.5 லிட்டர் டீசல் இஞ்ஜின் தேர்வில் மட்டுமே கிடைக்கிறது.
கியர்பாக்ஸ்;
நிஸான் டெரானோ எஸ்யூவி, 5-ஸ்பீட் மேனுவல் மற்றும் 6-ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் கிடைக்கும்.
செயல்திறன்;
நிஸான் டெரானோ எஸ்யூவியின் டீசல் இஞ்ஜின், 2 விதமான டியூனிங் தேர்வுகள் கொண்டுள்ளது. முதல் டியூனிங்கில், நிஸான் டெரானோ எஸ்யூவியின் 1.5 லிட்டர் டீசல் இஞ்ஜின், 85 பிஹெச்பியையும், 200 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் கொண்டுள்ளது. இரண்டாம் டியூனிங்கில், இந்த 1.5 லிட்டர் டீசல் இஞ்ஜின், 108 பிஹெச்பியையும், 248 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.
விலை;
நிஸான் டெரானோ எஸ்யூவியின் பேஸ் வேரியன்ட் எனப்படும் அடிப்படை வேரியன்ட், 9.99 லட்சம் ரூபாய் என்ற (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் விற்கப்படுகிறது.

Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply