ஜப்பானில் விற்பனைக்கு வந்த டொயோட்டா பிக்சிஸ் ஜாய் மினி கார்

Loading...

%e0%ae%9c%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%a8நீடித்த உழைப்பு, நெடிய ஆயுள், நம்பகத்தன்மையால் டொயோட்டா கார் மாடல்களுக்கு தனி மரியாதை இருக்கிறது. ஆனால், நாம் விரும்பும் டொயோட்டா இங்கே கொஞ்சம் காஸ்ட்லி விஷயமாகவே இருக்கிறது என்று பலரும் நினைப்பதுண்டு. இந்த நிலையில், தனது தாயகமான ஜப்பானில் பிக்சிஸ் ஜாய் என்ற புதிய குட்டி கார் மாடலை அறிமுகம் செய்திருக்கிறது டொயோட்டா நிறுவனம். இந்த காரையெல்லாம் இந்தியாவுக்கு கொண்டு வரக்கூடாதா எனும் அளவுக்கு கவர்ச்சியும், அடக்கமும் நிறைந்ததாக கார் ஏங்க வைக்கிறது இந்த பிக்சிஸ் ஜாய். ஓட்டுவதற்கு எளிமையான, நகர்ப்புறத்துக்கு ஏற்ற அம்சங்களை கொண்ட இந்த குட்டி கார் பார்ப்போரை வெகுவாக கவர்கிறது. வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு பயணமும் மகிழ்ச்சியாக அமைய வேண்டும் என்பதற்காகவே ஜாய் என்று பெயரிட்டிருப்பதாக டொயோட்டா தெரிவிக்கிறது. தோற்றம் மட்டுமல்ல, தொழில்நுட்ப விஷயங்களிலும் விலையிலும் கூட இந்தியர்களை கவர்ந்திழுக்கிறது. இந்த கார் C,F மற்றும் S ஆகிய மூன்று மாடல்களில் வந்துள்ளது. C க்ராஸ்ஓவர் என்பதையும், F பேஷனையும், S என்பது ஸ்போர்ட்ஸ் என்றும் குறிக்கிறதாம். இந்த கார் வந்தால் இந்தியர்கள் அடித்து பிடித்து புக்கிங் செய்வர். ஏன் தெரியுமா, இந்த கார் லிட்டரு்கு 30 கிமீ மைலேஜ் தருமாம். இது போதாதா நமக்கு. மாருதி மட்டுமில்லை, பாக்கெட்டை பதம் பார்க்காத எந்த மாடலும் எமக்கு இஷ்டம்தான். டொயோட்டா பிக்சிஸ் ஜாய் காரின் சி மாடலில் 15 இன்ச் அலுமினியம் சக்கரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது பார்ப்பதற்கு க்ராஸ்ஓவர் போல இருப்பதும், அதற்கு இந்த 15 இன்ச் அலுமினியம் வீல்கள் பொருத்தமாக இருப்பதும் இங்கே குறிப்பிட்டாக வேண்டிய விஷயம். எஃப் மாடலில் சற்று வித்தியாசமான பம்பர் அமைப்பும், எஸ் மாடலில் ஏரோடைனமிக் சமாச்சாரங்களை தரும் கூடுதல் பாடி கிட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், விசேஷ சஸ்பென்ஷனும், 7 ஸ்பீடு கியர்பாக்ஸ், பேடில் ஷிஃப்ட் வசதியும் ஸ்போர்ட்ஸ் மாடலின் கூடுதல் சிறப்பம்சங்கள். இந்த காரில் மோதல்களை தவிர்ப்பதற்கான விசேஷ பாதுகாப்பு தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டிருக்கிறது. டொயோட்டா பிக்சிஸ் ஜாய் காரில் 660சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. அதுவே, ஜாஸ் எஸ் மாடலில் இந்த 660சிசி எஞ்சின் டர்போசார்ஜர் துணையுடன் இயங்கும் தொழில்நுட்பம் கொண்டது. இந்திய மதிப்பில் ரூ.7.91 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான விலையில் இந்த கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply