சோலார் கூரைத் தகடுகள் பற்றி சந்தோசமான தகவல்

Loading...

%e0%ae%9a%e0%af%8b%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%b0%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%95%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1டெஸ்லா நிறுவனமானது சோலார் தொழில்நுட்பத்தினைக் கொண்ட கூரைத் தகடுகளை உற்பத்தி செய்துள்ளமை தொடர்பான செய்தி சில வாரங்களுக்கு முன்னர் வெளியாகிருந்தது.
ஒரு வீட்டுக்கு தேவையான மின் சக்தியினை குறித்த கூரைத்தகடுகளே சூரிய ஒளியில் இருந்து உற்பத்தி செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியான Elon Musk மற்றுமொரு குதூகலமான செய்தியை வெளியிட்டுள்ளார்.
அதாவது சாதாரண கூரைத் தகடுகளை விடவும் இந்த சோலார் கூரைத் தகட்டின் விலை குறைவாகவே இருக்கும் என்பதே அச் செய்தியாகும்.
இதனால் இக் கூரைத்தகடுகளை பெருமளவானவர்கள் விரும்புவதாக தெரிவித்தும் உள்ளனர்.
எனினும் இவற்றின் சரியான பெறுமதி தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இன்னும் சில வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ள இக் கூரைத்தகடுகள் தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்பலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply