சென்னையில் விற்பனைக்கு அறிமுகமானது ரோல்ஸ்ராய்ஸ் டான்

Loading...

%e0%ae%9a%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85இங்கிலாந்தின் பெருமைக்குரிய சிறப்பம்சங்களில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனமும் ஒன்று. உலகின் அதி சிறந்த கார்களை வரிசையிட்டால், அதில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் முதல் 5 இடங்களுக்குள் இருக்கும்.
அத்தகைய பெருமையும், சொகுசும் நிறைந்த அல்ட்ரா மாடர்ன் ரக கார்கள் அவை. ஒரு நாளாவது அந்தக் காரை ஓட்ட மாட்டோமா? அல்லது உட்கார்ந்து செல்ல மாட்டோமா? என்று கூட சிலருக்கு ஆசைகள் இருக்கும்.

அப்பேர்பட்ட ரோல்ஸ் ராய்ஸின் ஆகச் சிறந்த மாடல்களில் ஒன்று டான். பார்ப்பவர்களை வியப்பின் உச்சத்திலேயே ஆழ்த்தி விடும் படு ஸ்டைலான சொகுசு கார் அது. அந்தக் காரை எங்கு எடுத்துச் சென்றாலும், அந்த இடத்தில் நீங்கள்தான் ஹீரோவாக இருப்பீர்கள்.
அந்த பிரம்மாண்ட கார் தென்னிந்தியாவில் முதன் முறையாக களமிறக்கப்பட்டுள்ளது.
ஹாட்டான சென்னையின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் கடந்த வெள்ளிக்கிழமை (ஆக.5) நடைபெற்ற விழாவில்தான் அந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டது.
தென்னிந்திய ஆட்டோ மொபைல் உலகை ஆட்டவிக்க புதிய டானாக அது உருவெடுத்துள்ளது என்று கூட சொல்லலாம். 110 ஆண்டு பாரம்பரியமிக்க ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான டான் கார், பார்க்க ஹாலிவுட் நடிகர் ஜானி தேப் மாதிரி பக்கா ஸ்மார்ட் அண்டு ஸ்பைசி லுக்.
ஓபன் ரூஃப் டாப் மாடலில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் அதன் கூரையை (ரூஃப்) பயன்படுத்திக் கொள்ளலாம். ரூஃப், தானாக மூடிக் கொள்ளும்போது துளியளவு கூட சத்தம் வராத வகையில் அது டிசைன் செய்யப்பட்டுள்ளது. பட்டனை அழுத்தினால் வெறும் 20 விநாடிகளில் அந்த ரூஃப் மூடிக் கொள்ளுமாம்.
வெளிப்புறத் தோற்றத்தில் ஆளை அசத்தும் வகையில் உள்ளது டான் மாடல். அதன் செம ரிச்சான டிசைன் முதல் பார்வையிலேயே நம்மை கிளீன் போல்டாக்கி விடும். அவுட்டர் டிசைன் அமேஸிங் என்றால் இண்டீரியரைப் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லே. ஆரஞ்ச் நிற இருக்கைகள், வுட்டன் ஃபினிஷ் இண்டீரியர் கேபின்கள், அற்புதமான ஸ்டீயரிங்கள் என மயக்கும் கொள்ளை அழகாக அவை உள்ளன.
பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டயர்கள் டான் மாடலில் பொருத்தப்பட்டுள்ளன. இதில் வி – 12 டிவின் டர்போ எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. விலை ரூ.6.25 கோடி முதல் தொடங்குகிறது.
விடியோ காட்சிகளில் வியந்து பார்த்த டான் காரை இனி நம்ம ஊர் வீதிகளிலும் பார்க்கலாம்…

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply