சூப்பரான தேங்காய்ப்பால் மட்டன் பிரியாணி

Loading...

%e0%ae%9a%e0%af%82%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a4%e0%af%87%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d
தேவையான பொருட்கள் :

மட்டன் – ஒரு கிலோ
பாஸ்மதி அரிசி – 1 கிலோ
நெய் – 100 கிராம்
எண்ணெய் – 150 மில்லி
பெரிய வெங்காயம் – அரை கிலோ
தக்காளி – 400 கிராம்
பெரிய எலுமிச்சை பழம் – 1 சாறு எடுக்கவும்
இஞ்சி விழுது – 2 டேபிள்ஸ்பூன்
பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
பட்டை, லவங்கம், ஏலக்காய் – 15 கிராம்
புதினா , கொத்தமல்லித்தழை – அரைக் கட்டு
தேங்காய் – அரை மூடி
மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு


செய்முறை:

* அரிசியை கழுவி 10 நிமிடம் ஊற வைக்கவும்.
* தேங்காயை மிக்சியில் போட்டு தேங்காய் பால் எடுத்து வைக்கவும்.
* ஆட்டுக்கறியை நன்றாக கழுவி குக்கரில் அரை டம்ளர் தண்ணீர், மிளகாய்த்தூள், உப்பு, அரை டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 5 விசில் போட்டு வேகவிட்டு இறக்கவும்.
* பிரியாணி பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், லவங்கம் சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாற வதக்கவும்.
* இத்துடன் மீதம் இருக்கும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
* அடுத்து இதில் வேக வைத்த ஆட்டுக்கறியை மட்டும் சேர்த்து வதக்கவும்.
* அடுத்து தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழை, உப்பு, மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து கிரேவி பதம் வரும் வரை கொதிக்க விடவும்.
* இத்துடன் தேங்காய்ப்பால், கறி வேக வைத்த தண்ணீர் சேர்த்து கலவையை வேக விடவும்.
* மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரிசி, தண்ணீர் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் சாதத்தை வடித்துக் கொள்ளவும்.
* பிரியாணி கலவையில் அரிசியை உடையாமல் சேர்த்துக் கிளறி நெய் மற்றும் கொத்தமல்லித்தழை தூவி சமமாக கலக்கவும்.
* அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அதன் மேல் பிரியாணி சட்டியை வைத்து மூடி போட்டு அதன் மேல் சோறு வடித்த கஞ்சியை வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான தேங்காய்ப்பால் மட்டன் பிரியாணி ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply