சூட்கேஸ் வடிவில் ஓர் ஸ்கூட்டர் ஒரு ரவுண்டு போகலாம் வாங்க

Loading...

%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%af%87%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95வழக்கமான டிசைன் தாத்பரியங்களைவிட்டு புதுமையாக உருவாக்கப்படும் வாகனங்கள் எப்போதுமே தனி கவனத்தை பெறும். அந்த வகையில், சூட்கேஸ் போன்று தோற்றமளிக்கும் ஒரு ஸ்கூட்டர் தற்போது மீடியாவினரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கான்செப்ட் நிலையிலிருந்து உற்பத்தியை எட்டிவிட்ட இந்த ஸ்கூட்டர் பேட்டரியில் இயங்கக்கூடியது. எனவே, நகர்ப்புற பயன்பாட்டுக்கு ஏற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரின் முக்கிய சிறப்பம்சங்களை தொடர்ந்து காணலாம்.
புக்கிங்
Boxx என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த ஸ்கூட்டர் கடந்த 2012ம் ஆண்டு கான்செப்ட் நிலையில் அறிமுகம் செய்யப்பட்டது. விந்தையான தோற்றமுடைய இந்த ஸ்கூட்டருக்கு குறிப்பிடத்தக்க ஆர்டர்களுடன் வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைத்திருப்பதால் உற்பத்திக்கு கொண்டு செல்லப்படுகிறது.
டிசைன்
பெரிய சூட்கேஸில் இருக்கை, ஹெட்லைட், ஹேண்டில்பாரை கொடுத்து ஸ்கூட்டராக உருவாக்கியிருக்கின்றனர். அதாவது, ரொம்ப சிம்பிளான டிசைன்.
மாடல்கள்
Boxx el, Boxx மற்றும் Boxx M ஆகிய மூன்று மாடல்களில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு செல்ல இருக்கிறது.
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
ஒரு மீட்டர் நீளமுடைய இந்த ஸ்கூட்டர் பேட்டரியில் இயங்குகிறது. இந்த ஸ்கூட்டரில் மூன்று பிரஷ்லெஸ் மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.
ஆல் வீல் டிரைவ்
மூன்று மின்மோட்டார்களிலிருந்து கிடைக்கும் சக்தியானது இரண்டு சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது. இதற்காக காப்புரிமையும் பெறப்பட்டிருக்கிறது.
முறுக்குவிசை
எலக்ட்ரிக் வாகனங்களுக்கு முறுக்குவிசை மிக முக்கியமானது. அந்த வகையில், இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக 111 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்துவதால், ஏமாற்றம் இருக்காது.
ரேஞ்ச் விபரம்
Boxx el மாடல் 32 கிமீ தூரம் வரை ரேஞ்ச் கொண்டது. மணிக்கு அதிகபட்சமாக 45 கிமீ வேகம் வரை செல்லும். Boxx மாடல் 64 கிமீ ரேஞ்ச் கொண்டது. மணிக்கு 56 கிமீ வேகம் வரை செல்லும். Boxx M மாடல் 86 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்பதுடன், மணிக்கு 87 கிமீ வேகம் வரை செல்லும்.
விலை விபரம்
பாக்ஸ் இ மாடல் 2,999 டாலர் விலையிலும், பாக்ஸ் மாடல் 3,797 டாலர் விலையிலும், பாக்ஸ் எம் மாடல் 4,987 டாலர் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply