சுவையான முருங்கைக்கீரை உருளைக்கிழங்கு சால்னா

Loading...

%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%80%e0%ae%b0%e0%af%88-%e0%ae%89
தேவையான பொருட்கள் :

முருங்கைக்கீரை – 2
உருளைக்கிழங்கு – 1
பெரிய வெங்காயம் – 1
பூண்டு – 4 பல்
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 2
உப்பு – தேவைக்கு,
அரைத்துக் கொள்ள :
தேங்காய்த்துருவல் – 3 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1


செய்முறை :

* வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மிக்சியில் தேங்காய் துருவல், ப.மிளகாய் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
* முருங்கைக்கீரையை ஆய்ந்து அலசி தண்ணீர் வடித்து வைக்கவும்.
* குக்கரில் எண்ணெய் விட்டு சூடானவுடன் உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல் சேர்த்து சிவந்து வரும் பொழுது, பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் வதங்கி வரும் போது சீரகத்தூளை சேர்க்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் கீரையை சேர்த்து நன்கு வதக்கவும்.
* அடுத்து அதில் உருளைக்கிழங்கு சேர்த்து 2 கப் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து 2 விசில் போட்டு அடுப்பை அணைக்கவும்.
* விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து அரைத்த தேங்காய் விழுது மற்றும் தேவைக்கு தண்ணீர் சேர்க்கவும்.
* நன்கு கொதிக்க விடவும், தேங்காய் வாடை போனவுடன் அடுப்பை அணைக்கவும்.
* சுவையான முருங்கைக்கீரை உருளைக்கிழங்கு சால்னா ரெடி.
* சூடான சாதத்துடன் சூப்பராக இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply