சுவையான சத்தான சிறுதானிய தோசை

Loading...

%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af
தேவையான பொருட்கள் :

வரகு, கம்பு, சோளம் – தலா அரை கப்,
உளுந்து – கால் கப்புக்கும் சிறிது அதிகமாக,
துவரம்பருப்பு – ஒரு கைப்பிடி,
வெந்தயம் – அரை டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.


செய்முறை :

* அனைத்து தானியங்களையும், பருப்பு வகைகளையும், வெந்தயத்தையும் சேர்த்து நன்றாக கழுவி 3 மணிநேரம் ஊற வைக்கவும்.
* நன்றாக ஊறி பின்னர் கிரைண்டரில் தோசைமாவு பதத்தில் அரைத்து உப்பு சேர்த்து 6 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை மெல்லிய தோசைகளாக வார்த்து தேங்காய் சட்னி, மிளகாய் பொடி, கார சட்னியுடன் பரிமாறவும்.
* சுவையான சத்தான சிறு தானிய தோசை ரெடி.
* 4 தானியங்களை தோலுடனும் சேர்க்கலாம், தோலுடன் சேர்த்தால் 5 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். அப்போதே உப்பு சேர்ப்பதால் சரியான பதத்துக்கு புளித்திருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply