சுவையான சத்தான கொண்டைக்கடலை ஆலு சாலட்

Loading...

%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95
தேவையான பொருட்கள் :

வெள்ளை கொண்டைக்கடலை – ஒரு கப்,
உருளைக்கிழங்கு – 2
வெங்காயம் – 1
மிளகுத்தூள், சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன்,
சாட் மசாலா, எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்,
கொத்தமல்லி, – சிறிதளவு,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.


செய்முறை :

* உருளைக்கிழங்கு, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கொண்டைக்கடலையை முதல் இரவே ஊற வைத்து, மறுநாள் காலையில் குக்கரில் போட்டு நன்கு வேக வைக்கவும்.
* கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி உருளைகிழங்கை போட்டு சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் வேக வைத்த உருளைக்கிழங்கு, வேக வைத்த கொண்டைக்கடலை, மிளகுத்தூள், சீரகத்தூள், சாட் மசாலா, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து நன்கு கலந்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
* சுவையான சத்தான கொண்டைக்கடலை ஆலு சாலட் ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply