சுரைக்காய் அடை

Loading...

%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9f%e0%af%88
என்னென்ன தேவை?

இட்லி அரிசி – 1 கப்,
கடலைப்பருப்பு – 1 கப்,
துவரம்பருப்பு – 1 கப்,
சுரைக்காய் – 1 (தோல் சீவி, விதை நீக்கி, மெல்லியதாக துருவியது),
இஞ்சி – 1 இன்ச்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
சோம்பு – 1/2 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் – 12,
பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு,
கடுகு – 1 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

இட்லி அரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு மூன்றையும் 2 மணி நேரம் ஊற வைத்து, அதில் இஞ்சி, சீரகம், சோம்பு, பெருங்காயம், காய்ந்தமிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அடைமாவு பதத்திற்கு அரைக்கவும். கடுகை தாளித்து மாவுடன் சேர்க்கவும். மிதமான தீயில் அடை ஊற்றி, துருவிய சுரைக்காயை அடை மேல் தூவி, இருபக்கமும் எண்ணெய் ஊற்றி, சற்று பொன்னிறமாக வெந்ததும் எடுத்து பரிமாறவும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply