சிரமமின்றி சருமத்தை பொலிவாக்க வேப்பிலை போதும்

Loading...

%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b2%e0%ae%bfவேப்பிலை பலன்கள் நம் அனைவருக்கும் தெரியும். இந்த இலை உடலுக்கு மருந்தாகவும், தெய்வீக பூஜைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இயற்கை முறையில் எவ்வித இரசாயன கலப்புமின்றி நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய வேப்பிலையைப் பயன்படுத்தி சருமத்தைப் பொலிவாகவும், ஆரோக்கியத்துடனும் பாதுகாக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

வீட்டிலேயே கிடைக்கக்கூடிய வேப்பிலை மற்றும் தயிர் கொண்டு செய்யக்கூடிய மாஸ்க் மூலம் சருமத்தை எப்படிப் பாதுகாத்து பொலிவுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பார்ப்போமா..


செய்முறை:

மரத்தில் இருந்து நேரடியாத பறித்த வேப்பிலை எடுத்துக் கொண்டு அதில் 2 டேபிள் ஸ்பூன் தயிர் கலந்து அரைத்துக் கொள்ளுங்கள்.

பின் இந்தக் கலவையை முகம் , கழுத்து மற்று கைகளுக்குத் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் எதிர்பார்த்ததைப் போல அருமையாகச் சருமம் பொலிவு பெறும். அழுக்குகள், வெயிலினால் உண்டாகும் கருமை காணாமல் போய்விடும்.

இந்தக் கலவையானது சருமத்தில் பாதிப்படைந்த செல்களை குணமாக்குகிறது. முகப்பருவினால் உண்டாகும் தழும்புகள். சிறு காயங்களின் தழும்புகளும் மறையும். தினமும் உபயோகித்தால் தழும்புகள் போய் முகம் பளிச்சிடும்.

இயற்கையாகவே சூரிய ஒளிக்கதிர்களைத் தடுக்கும் ஆற்றல் வேப்பிலை மற்றும் தயிருக்கு உண்டு. ஆகவே இவை புற ஊதாக்கதிர்களிடமிருந்து உங்களைப் பாதுகாக்கும்.

வேப்பிலையில் பேக்டீரியா எதிர்ப்புதிறன் அதிகம் இருக்கிறது. முகப்பருக்களின் மீது செயல்புரிந்து பருக்களை ஆற்றி, மேலும் வரவிடாமல் தடுக்கும்.

தயிரில் இயற்கையாக ப்ளீச்சிங் குணங்கள் இருக்கிறது. வெயிலினால் உண்டாகும் கருமையை போக்கி, நிறத்தை அதிகரிக்கச் செய்யும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply