சருமத்தின் ஆரோக்கியம் முழு உடலின் ஆரோக்கியத்தின் பிரதிநிதித்துவமாக இருக்கும்

Loading...

%e0%ae%9a%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aeசருமத்தின் ஆரோக்கியம், முழு உடலின் ஆரோக்கியத்தின் பிரதிநிதித்துவமாக இருக்கும். அழகான சருமத்திற்காக நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவு, உடல் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக இருக்கும்.

சத்துக்கள், வைட்டமின்கள், புரதங்கள் போன்றவை அடங்கிய உணவுகள், பொலிவற்ற சருமத்தை சரி செய்து, நல்ல பளபளப்பையும், இளமையான தோற்றத்தையும் தருகிறது. ஆனால் மறுபுறம், உங்கள் நாக்கிற்கு சுவையை அள்ளித் தரும் சில உணவுகள் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு எந்தவித நன்மைகளையும் தராமல், சில எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.

ஆகவே உங்கள் சரும ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் உணவுகளை நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால், அவை கீழே பட்டியலிட்டு கொடுக்கப்பட்டுள்ளன.


ஆல்கஹால்

ஆல்கஹால் பாட்டிலிலேயே, அதிக அளவிலான ஆல்கஹால், ஆபத்தை ஏற்படுத்தும் என்ற முன் எச்சரிக்கை இருக்கும்.ஆனால் மிதமான ஆல்கஹால் உட்கொள்ளலும் சருமத்தில் எதிர்மறை பாதிப்புக்களை ஏற்படுத்தும். ஆல்கஹால் நமது தோலில் உள்ள நீர்ச்சத்தை பிரித்து நீக்கி,சருமத்தை உலர்வாகவும், கடினமானதாகவும் மாற்றுகிறது. இதுவே குறிப்பிட்ட காலத்திற்கு முன்னமே, முதுமை அடைதலுக்கு காரணமாக அமைகிறது .


உப்பு

அதிக அளவில் உப்பை எடுத்துக் கொள்ளுவது, உங்கள் இதயத்திற்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது. உங்கள் உணவில் உள்ள அதிக அளவிலான உப்பு, கண்களில் பொங்குதலையும், முகம் வீக்கத்தையும் ஏற்படுத்திவிடும்.


காபி

நீங்கள் ஒரு நாளைக்கு, இரண்டு கப்புக்கு மேல், காபிகளை எடுத்துக் கொள்பவராக இருந்தால், உங்கள் சருமம் பொலிவிழந்து, மென்மையை இழந்து காணப்படும். காபி மற்றும் காபி தயாரிப்புகளை கட்டுப்பாடின்றி எடுத்துக் கொண்டால், அது கார்டிசால் என்ற மன அழுத்தத்திற்கான ஹார்மோனை வெளியேற்றுகிறது. இது சரும மென்மையுடன் தொடர்புடைய ஹார்மோன் ஆகும். இதனால் சருமத்தில் முதிர்ந்த நிலையும், பொலிவிழந்த தன்மையும் ஏற்படுகிறது.


துரித உணவுகள்

தெருக்கடை ஓர உணவுகள், வறுத்த உணவுகள் மற்றும் சில நொடிகளில் உங்கள் மேஜையை வந்தடையும் மந்திர உணவுகள் உங்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவித்திடும். இது இரத்த ஓட்டத்தைக் குறைத்து, சருமத் துவாரங்களை அடைத்து, பாக்டீரியா உருவாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இது பருக்களின் வளர்ச்சியை தூண்டுகிறது.


இனிப்பு

இனிப்பு உடைய கொழுப்பு உணவுகள், நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. மேலும் சருமத்தில் பருக்கள் உருவாக காரணமாகிறது. ஒரு குறிப்பிட்ட அளவு மட்டும் இனிப்பு எடுத்துக் கொண்டால், உங்கள் சருமம் சுத்தமாகவும், நன்றாகவும் இருக்கும்.


செயற்கையான சேர்க்கை பொருட்கள்

பல ரெடிமேட் உணவுப் பொருட்களில், செயற்கையான வண்ணமூட்டிகள், ப்ளேவர் பொருட்கள், பதப்படுத்த பயன்படும் பொருட்கள் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளன. இதில் சத்துக்களும், புரதங்களும் இருப்பதில்லை. சில நேரங்களில், செயற்கை ப்ளேவர்களின் காரணமாக, நீங்கள் இஸ்டமின் விளைவுகளையும், அழற்சியையும் அடைவீர்கள். இந்த வேதிப் பொருட்கள் தொடர்ந்து நமது திசுக்களை பாதித்தால், எதிர் காலத்தில் பல பெரிய பிரச்சனைகள் உருவாகும்.


பாஸ்தா மற்றும் வெள்ளை பிரட்

குறைந்த கிளைசீமிக் உணவுகளான பாஸ்தா, வெள்ளை பிரட் மற்றும் கேக் போன்றவை சருமத்தில் பருக்களை உருவாக்கி விடும். எனவே உங்கள் ஆரோக்கியத்திற்கு உகந்த முழு தானியங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.


பால் பொருட்கள்

நீங்கள் முந்தைய இரவில் அதிக அளவு பால் பொருட்களை எடுத்துக் கொண்டதால், மறுநாள் காலையில் உங்களுக்கு முகத்தில் பருக்கள் தோன்றியதா? சில நேரங்களில் அவ்வாறு நடக்கலாம். பால் பொருட்கள், உடலில் சளியை தோற்றுவித்து பாக்டீரியாக்கள் உடலில் புக அனுமதிக்கிறது. மேலும் அலர்ஜியை தோற்றுவித்து, சருமத்தில் பருக்களை உண்டாக்குகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply