சத்தான குதிரைவாலி தக்காளி சாதம்

Loading...

%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3

தேவையான பொருட்கள் :

குதிரைவாலி அரிசி – 1 கப் (150 gms)
தண்ணீர் – 3 கப்
தக்காளி – 3 (நடுத்தர அளவு)
சிறிய / பெரிய வெங்காயம் – 1/2 கப்
இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை – 1/4 கப்
புதினா இலை – 6
நல்லெண்ணை – 2 தேக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
சோம்பு – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 1 ஈர்க்கு
பச்சை மிளகாய் – 1
மிளகாய் தூள் – 1/4 சிட்டிகை
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு – சுவைக்கேற்ப
பட்டை – 1 துண்டு (1/4 இன்ச் நீளமுள்ளது)
கிராம்பு – 3
பிரியாணி இலை – 2

செய்முறை :
* குதிரைவாலியை நன்றாக கழுவி 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்.
* வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
* குக்கரில் எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, சோம்பு, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி, பூண்டு விழுது போட்டு நன்றாக வதக்கவும்.
* அடுத்து அதில் கொத்தமல்லி தழை, புதினா இலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
* பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
* அடுத்து குக்கரில் நீரை ஊற்றவும். அது கொதிநிலைக்கு வந்த பிறகு குதிரைவாலி அரிசியைக் களைந்து போடவும். தேவையான உப்பு சேர்த்து அரிசியை நன்றாக கலந்து குக்கரை மூடவும்.
* முதல் விசில் வந்த பிறகு, தீயைக் குறைத்து 8 நிமிடங்கள் காத்திருந்து, அடுப்பை அணைக்கவும்.
* குக்கரில் ஆவி போன பின்பு, கொத்தமல்லி தழை தூவி சாதத்தை ஒரு முறை கிளறி விட்டு, சூடாக பரிமாறவும்.


குறிப்பு:

* வரகு மற்றும் சாமை அரிசிகளையும் கூட உபயோகிக்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply