கொத்தமல்லி தழை புலாவ்

Loading...

%e0%ae%95%e0%af%8a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%b4%e0%af%88-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b5%e0%af%8dவெங்காயம் -1
பட்டை -2
கிராம்பு -2
ஏலக்காய் -1
பிரியாணி இலை -2
எண்ணெய் -தேவையான அளவு
கொத்தமல்லி தூள் -3 டேபிள் ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
பிரியாணி அரிசி -1 கப்
பச்சை மிளகாய் -2
கொத்தமல்லி தழை -1 கட்டு (சின்ன கட்டு )
தக்காளி -2
இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 டேபிள் ஸ்பூன்


Step 1


அரைக்க வேண்டிய பொருட்கள்:
பச்சை மிளகாய் -2 கொத்தமல்லி தலை-1 கட்டு (சின்ன கட்டு ) தக்காளி -2 இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 டேபிள் ஸ்பூன் மேலே அரைக்க வேண்டிய பொருட்களை போட்டு அரைத்துக் கொள்ளவும்.

Step 2

அரைத்த பின்பு ஒரு பாத்திரத்தில் அரிசியை கழுவி தண்ணீரை வடித்து விட்டு அதில் அரைத்து வைத்த மசாலாவை அரிசியோடு பிசைந்து அரை நேரம் ஊற விடவும். வெங்காயத்தை பொடியை நறுக்கிக் கொள்ளவும்.

Step 3

பின்பு குக்கரில் எண்ணெய்யை ஊற்றி அதில் பட்டை,கிராம்பு,ஏலக்காய் மற்றும் பிரியாணி இலை போட்டு தாளிக்கவும்.தாளித்த பின்பு அதில் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.வெங்காயம் வதங்கிய பின்பு அதில் ஊற வைத்த அரிசியை போட்டு கிளறி விடவும்.கிளறிய பின்பு அதில் உப்பு மற்றும் கொத்தமல்லி தூளை போட்டு சிறிது நேரம் கிளறி விடவும்.

Step 4

கிளறிய பின்பு அதில் அரை கப் தண்ணீர் ஊற்றி குக்கரை முடி இரண்டு விசில் விட்டு பத்து நிமிடம் அடுப்பை மிதமான வைத்து இறக்கவும்.(குறிப்பு :அரிசி மசாலாவோட கலந்து இருப்பதால் தண்ணீர் இருக்கும் அதனால் அரை கப் தண்ணீர் போதும்.)இதோகொத்தமல்லி தலை புலாவ் ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply