கொத்தமல்லி சப்பாத்தி

Loading...

%e0%ae%95%e0%af%8a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%9a%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf
தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 1 1/2 கப்,
உப்பு – தேவையான அளவு,
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை,
சிவப்பு மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,
நறுக்கிய கொத்தமல்லி – 1/2 கப்,
எண்ணெய் – தேவையான அளவு,
தண்ணீர் – தேவையான அளவு.


செய்முறை :

* கொத்தமல்லியை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் தவிர மற்ற பொருட்களை சேர்த்து நன்கு கலந்த பிறகு 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து 30 நிமிடம் ஊற விடவும்.
* பிறகு அதை சரி சமமான உருண்டைகளாக பிரித்து சப்பாத்தி கல்லில் வட்ட வடிவில் உருட்டி வைக்கவும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் உருட்டி வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் சேர்த்து இரண்டு பக்கமும் வேக விட்டு எடுக்கவும்.
* சுவையான கொத்தமல்லி சப்பாத்தி தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply