கேழ்வரகு – காய்கறி உப்புமா

Loading...

%e0%ae%95%e0%af%87%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%95%e0%af%81-%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%95%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%89%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81
தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு – 100 கிராம்
கேரட் – 100 கிராம்
பீன்ஸ் – 100 கிராம்
உருளைகிழங்கு – 50 கிராம்
வெங்காயம் – 50 கிராம்
மிளகாய் – 4
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
தாளிக்க- கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய்

செய்முறை :

• வெங்காயம், ப.மிளகாய், கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை ப.மிளகாய் போட்டு தாளித்து காய்கறிகளை போட்டு சிறிது நேரம் வதக்கிய பின் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் உப்பு சேர்த்து காய்கறிகளை வேக வைக்கவும்.
• பின்னர் அதில் கேழ்வரகு மாவை சிறிது சிறிதாக கொட்டி கைவிடாமல் கிளற வேண்டும்.
• தண்ணீர் வற்றி கொட்டியான பதம் வந்ததும் கொத்தமல்லை தழை தூவி இறக்கவும்.
• சத்தான கேழ்வரகு – காய்கறி உப்புமா ரெடி

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply