கேரட் முதியா

Loading...

%e0%ae%95%e0%af%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%beகடலை மாவு – 1 கப்,
கோதுமை மாவு – 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
துருவிய கேரட் – 1 கப்,
இஞ்சி – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது),
நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்,
பச்சைமிளகாய் – 1,
தனியா தூள் – 1 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
எலுமிச்சைச்சாறு – 1 டீஸ்பூன்,
சர்க்கரை – 1 1/2 டீஸ்பூன்,
சோடா உப்பு – 1/2 டீஸ்பூன்.

தாளிக்க:
எண்ணெய் – 3 டீஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன்,
வெள்ளை எள் – 1 டேபிள்ஸ்பூன்.


எப்படிச் செய்வது?

தாளிப்பு பொருட்களை தவிர மற்ற அனைத்து பொருட்களையும் சிறிதளவு தண்ணீருடன் சேர்த்து பூரி மாவு பக்குவத்தில் பிசைந்து எடுக்கவும். பிசைந்த மாவை விரல் அளவு உருட்டி நீள வடிவில், ஆவியில் வைத்து 8 அல்லது 10 நிமிடம் வரை வேக விடவும். எண்ணெய் சூடாக்கி கடுகு வெடிக்க விடவும். பின்னர் வெள்ளை எள் போட்டு வறுத்து,வேகவைத்தவற்றை சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடம் பிரட்டி எடுக்கவும். சூடான சத்தான கேரட் முதியாவை பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply