கேரட் பர்பி

Loading...

%e0%ae%95%e0%af%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bfகேரட் – 1/2 கிலோ
பால் – 1/2 லிட்டர்
சர்க்கரை – 1.5 கப்
கன்டென்ஸ்ட் மில்க் – 1/2 கப்
பால் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
நெய் – 3/4 கப்
ஏலக்காய் பொடி – 1 தேக்கரண்டி
பாதாம் – 3 டேபிள் ஸ்பூன்
பிஸ்தா – 2 டேபிள் ஸ்பூன்
குங்குமப்பூ – ஒரு சிட்டிகை
புட் கலர் – ஒரு சிட்டிகை

முதலில் சிறு சிறு துண்டுகளாக கேரட்டை வெட்டி மிக்சி ஜாரில் போட்டு சிறிது பால் சேர்த்து நன்கு மசித்து ஒரு கிண்ணத்தில் அதை எடுத்து வைக்கவும். ஒரு கடாயில் சிறிது நெய் ஊற்றி மசித்த கேரட்டை அதில் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் பால் சேர்த்து கலந்து நன்றாக வேக விடவும். இப்போது சர்க்கரை சேர்த்து கிளறவும். ஒரு கிண்ணத்தில் கன்டென்ஸ்ட் மில்க் எடுத்து அதில் பால் பவுடர் போட்டு கலந்து வைக்கவும். கேரட் கலவை தடித்து வந்த பின் கிண்ணத்தில் உள்ள கன்டென்ஸ்ட் மில்க் கலவையை சேர்த்து சிறிது புட் கலர், நெய் விட்டு கிளறவும்.
அவை கெட்டியாக ஆரம்பிக்கும் போது இன்னும் சிறிது நெய் சேர்த்து கலவை வாணலியில் ஒட்டாமல் வரும் வரை சமைக்கவும். இப்போது கடாயில் நெய் ஒரு தேக்கரண்டி விட்டு நறுக்கப்பட்ட பாதாம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி கேரட் கலவையில் ஊற்றி ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து ஒரு தட்டில் நெய் தடவி கேரட் கலவையை ஊற்றி பிஸ்தா மற்றும் குங்குமப்பூ தூவி சிறிது துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply