கொச்சியில் ஒரே நாளில் 200 க்விட் கார்களை டெலிவிரி கொடுத்த ரெனோ

Loading...

%e0%ae%95%e0%af%86%e0%ae%be%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-200-%e0%ae%95நெருப்புடா, நெருங்குடா என்று கம்பீரமாக வலம் வந்த மாருதி நிறுவனத்திற்கே உள்ளுக்குள் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது ரெனோ க்விட். இந்திய கார் மார்க்கெட்டின் அதிரடி நாயகனாக வலம் வரும் ரெனோ க்விட் முன்பதிவில் மாருதியே அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு இமாலய சாதனை புரிந்திருக்கிறது. ஆம். இதுவரை 1.5 லட்சம் க்விட் கார்கள் புக்கிங் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், க்விட் காரின் டெலிவிரியை விரைவுப்படுத்தியிருக்கிறது ரெனோ நிறுவனம். இதனை மெய்ப்பிக்கும் விதமாக கொச்சியில் சமீபத்தில் ஒரே நேரத்தில் 200 ரெனோ க்விட் கார்கள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கப்பட்டு இருக்கிறது.
விழாக்கோலம்
கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் ஒரே நாளில் 200 கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் நிகழ்ச்சிக்கு ரெனோ ஏற்பாடு செய்திருந்தது. விழா நடந்த இடத்தில் ஒரே நேரத்தில் 200 க்விட் கார்களை ஒரே இடத்தில் காண்பதே மட்டற்ற மகிழ்ச்சியை பலருக்கு ஏற்படுத்தியது.
குவிந்த வாடிக்கையாளர்கள்
ஆசையாய் புக்கிங் செய்த ரெனோ க்விட் காரை டெலிவிரி பெறும் மகிழ்ச்சியில் 200 வாடிக்கையாளர்கள் தங்களது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் வந்து குவிந்தனர்.
அதிகாரிகள்
கார்களை டெலிவிரி கொடுக்கும் நிகழ்ச்சியில் ரெனோ இந்தியா நிறுவனத்தின் தலைவர் சுமித் ஷானே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
மகிழ்ச்சி
உயர் அதிகாரிகளே நேரடியாக கார்களின் சாவியை உரிமையாளர்களிடம் ஒப்படைத்ததில், அங்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை வாடிக்கையாளர்களின் முகத்தில் காண முடிந்தது.
விளம்பரம்
சமீபத்தில்தான் கொல்லத்தில் 50 டட்சன் ரெடிகோ கார்கள் ஒரே நாளில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கப்பட்டது. அதேபோன்று, தற்போது க்விட் கார்களும் டெலிவிரி கொடுக்கப்பட்டிருக்கின்றன. இதன்மூலமாக, இரு கார்களுக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் எளிதாக பிரபலமடைந்து வருவதுடன், சிறிய கார் வாங்க திட்டமிட்டிருப்போர் மத்தியில் கூடுதல் கவர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.
வாடிக்கையாளர்கள் கருத்து
ரெனோ க்விட் காரின் டிசைன், மைலேஜ், வசதிகள் என அனைத்தும் தங்களை கவர்ந்ததாகவும், அதுவே தேர்வு செய்ய காரணமாகவும் பலர் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.
எஸ்யூவி ஸ்டைல்
ரெனோ க்விட் கார் இந்தளவு ஹிட் அடித்ததற்கு அதன் டிசைன் முக்கிய காரணம். சாதாரண ஹேட்ச்பேக் போன்று இல்லாமல் குட்டி எஸ்யூவி மாடல் போன்று நேர்த்தியாக இருக்கிறது.
எஞ்சின்
ரெனோ க்விட் காரில் இருக்கும் 799சிசி எஞ்சின் 53பிஎச்பி பவரை அளிக்க வல்லது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடலில் விற்பனைக்கு கிடைக்கிறது.
மைலேஜ்
ரெனோ க்விட் கார் லிட்டருக்கு 25.17 கிமீ மைலேஜ் தரும் என்று அராய் சான்றளித்துள்ளது. நடைமுறையில் லிட்டருக்கு 20 கிமீ., வரை மைலேஜ் தரும் என நம்பலாம். எனவே, தினசரி பயன்பாட்டில் பாக்கெட்டிற்கு பங்கம் விளைவிக்காது.
வசதிகள்
டாப் வேரியண்ட்டில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் ஆகியவை வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இடவசதி
4 பேர் அமர்ந்து செல்வதற்கான இடவசதியை ரெனோ க்விட் அளிக்கிறது. மேலும், அலுவலகம் செல்வதற்கும், பெண்களுக்கு ஏற்றதாகவும் இருப்பதால் பயன்பாட்டிற்கு சிறந்த மாடலாக மாறியிருக்கிறது.
பூட் ரூம்
இந்த காரில் பொருட்களை வைத்து எடுத்துச் செல்வதற்கு 300 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ரூம் இடவசதி இருப்பதும் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ள விஷயம்.
விலை
போட்டியாளர்களைவிட பல நவீன சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் ரெனோ க்விட் கார் ரூ.3 லட்சம் ஆன்ரோடு விலையில் கிடைக்கிறது.
பெஸ்ட் சாய்ஸ்
அசத்தலான டிசைன், அதிக வசதிகள், மைலேஜ், விலை என அனைத்திலும் ரெனோ க்விட் சிறந்த தேர்வாக மாறியிருக்கிறது.
காத்திருப்பு காலம்
கொடுக்கும் பணத்திற்கு சிறந்த தேர்வாக அமைந்திருப்பதால், தற்போது சில மாதங்கள் காத்திருந்தாலும் பரவாயில்லை, ரெனோ க்விட் காரை வாங்குவதே புத்திசாலித்தனம் என்று பலர் கருதுவதே தொடர்ந்து முன்பதிவு உயர்ந்து வருவதற்கு காரணமாக கூறலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply