கூழ் கொழுக்கட்டை

Loading...

%e0%ae%95%e0%af%82%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88அரிசி மாவு – 2 கப்,
தண்ணீர் – 2 கப்,
உப்பு – தேவைக்கு.

தாளிக்க:

எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன்,
பெருங்காயம் – 1/2 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 6,
துருவிய தேங்காய் அல்லது Desiccated coconut – 1/2 கப்.


எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, பெருங்காயம், உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதிவந்ததும், அரிசி மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் கிளறி கெட்டியானதும், இறக்கித் தட்டில் கொட்டவும். சிறிது ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். ஒரு பாத்திரத்தில் சுமார் 6 கப் தண்ணீர் விட்டுக் கொதிவந்ததும், அதில் உருண்டைகளைப் போட்டு நன்றாகக் கொதித்து, கூழும் உருண்டையுமாகத் தளதள என்று கொதிக்கும்போது, தேங்காய்த்துருவல் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, சூடாகப் பரிமாறவும்.

குறிப்பு:

காலை உணவுக்கும், மாலை டிபனுக்கும் ஏற்றது. ஃப்ரிட்ஜில் வைத்து மைக்ரோவேவில் ஒரு நிமிடம் சுட வைத்து சாப்பிடலாம். 2 நாள் வரைக்கும் கெடாது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply