குழித்தட்டு தொழில்நுட்பம் இரட்டிப்பாகும் விதை உற்பத்தி

Loading...

%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a8%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%aaகுழித்தட்டு கருவியை பயன்படுத்தி, தோட்ட பயிர்களுக்கான விதையை இரு மடங்காக உற்பத்தி செய்ய முடியும்’ என, வேளாண் பல்கலை ஆலோசனை வழங்கியுள்ளது.
வெங்காயம், தக்காளி, பீன்ஸ், கேரட், கொத்தமல்லி உள்ளிட்ட தோட்டப்பயிர்கள் விதை உற்பத்திக்கு, குழித்தட்டு எனும் விதையிடும் கருவியை, வேளாண் பல்கலை, இன்ஜி., கல்லுாரி அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து வேளாண் பல்கலை, வேளாண் இயந்திரங்கள் ஆராய்ச்சி மைய பேராசிரியர் கவிதா கூறியதாவது:
தொழில்நுட்ப பயன்பாட்டால், மண்ணின் தரத்தை குறைக்காமல் இருக்க, தேங்காய் நார் கழிவுகள், மண்புழு உரம் பயன்படுத்தப்படுகிறது. தோட்டப்பயிர்களின் விதை உற்பத்திக்கு, கைகளால் ஒவ்வொரு குழியிலும் நடவு செய்வது சிரமம்.
அதை தவிர்க்க இத்தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கருவி, வெற்றிடத்தால் உருவாக்கப்பட்ட ஒரு பெட்டி இருபுறமும் அசைந்து ஆடும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனுள், ஊசி அமைப்பிலான விதை உறிஞ்சுவான்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இவை கையால் இயக்கப்படும் போது, விதைகள் உறிஞ்சுவான்கள் மூலம் எடுக்கப்பட்டு, பரப்பப்படுகின்றன. இதன் மூலம், இயற்கை உரங்களால் விதை உற்பத்தி செய்யப்படுவதோடு, இரு மடங்காக விவசாயிகள் பலன் பெற முடியும் என ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. இம்முறையினை, விவசாயிகள் பயன்படுத்த முன்வரும்போது, விதை உற்பத்தி பல மடங்கு பெருகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply