குழந்தையை அடித்தால் இதெல்லாம்தான் நடக்கும் பெற்றோர்களே

Loading...

%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a4%e0%af%86%e0%ae%b2எவ்ளோ சொன்னாலும் கேக்குறதே இல்ல, அதான் அடிச்சேன்’ என்று சொல்லும் பெற்றோர்கள்தான் ’என் குழந்தையை அந்த டீச்சர் எப்படி அடிக்கலாம்’ என்று கொந்தளிக்கவும் செய்கிறார்கள். உண்மையில் குழந்தைகளை அடிப்பதால் அவர்கள் திருந்தி விடுவார்களா? திருந்த வேண்டியவர்கள் இங்கே குழந்தைகள் அல்ல, பெற்றோர்களே! நீங்கள் குழந்தையை அடிப்பது சூழலைப் பொறுத்து குற்றச் செயலாக மாறுகிறது.

பொதுவாக குழந்தைகளை எதற்கெல்லாம் அடிக்கிறோம். சரியாக சாப்பிடவில்லை, ஹோம்வொர்க் செய்யவில்லை, நல்ல மார்க் வாங்கவில்லை, சொல் பேச்சைக் கேட்பதில்லை, சேட்டை செய்கிறது என நாம் அவர்களை, செய்ய சொல்லும் வேலைகளை அவர்கள் செய்யாத போதும், அவர்கள் செய்ய கூடாத வேலைகளைச் செய்யும் போதும் குழந்தைகளை அடித்துவிடுகிறோம். உண்மையில் அவர்கள் எதெல்லாம் சாப்பிட வேண்டும் என்பதை நாம் சரியாக வரையறுத்து தருவதில்லை. சிறிய தப்புக்கும் அடித்துவிடும் பெற்றோர்கள் ஏராளம். ஆனால் உளவியல் ரீதியாகப் பார்க்கும் போது நாம் குழந்தைகளை அடிப்பது அவர்களின் மனதில் வடுவாக மாறி, அவர்களை மனரீதியாக பாதிக்கச் செய்கிறது.
அப்படி என்றால் குழந்தைகளை அடிக்கவே கூடாதா என்று கேட்டால் அதற்கான எல்லைகளை வரையறுக்கிறார் குழந்தைகள் மனநல மருத்துவர் ஜி.கே.கண்ணன்.
’’குழந்தைகளை எதற்கெடுத்தாலும் திட்டும் போது அவர்கள் மனரீதியாக பயம்,பதட்டம், வெறுப்பு இதையெல்லாம் அடைகிறார்கள். குழந்தைகளை அடிக்கவே கூடாது. கண்டிப்பு மட்டுமே போதுமானது. பெரியவர்களை திட்டும் போது அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாவது போல் தான் குழந்தைகளும் ஆளாவார்கள் என்பதை உணர வேண்டும்’’ என்று சொல்லும் மருத்துவர் எதற்கெல்லாம் குழந்தைகளை கண்டிக்கலாம் என்பதையும் பட்டியல் போடுகிறார்.
* அபாயகரமான மின்சாதனைகளையோ, நெருப்பையோ தொட முயற்சிக்கும்போது.
* உயரமான இடத்தில் இருந்து குதிப்பது அடம்பிடிக்கும்போது.
* மற்றவர்களை மரியாதை குறைவாகப் பேசும் போது
* குற்றச் செயல்களில் ஈடுபடும்போது
இப்படி ஆபத்து தரக்கூடிய செயல்களில் குழந்தைகள் ஈடுபடும் போது அவர்களைக் கண்டிக்கலாம். எடுத்தவுடன் அவர்களை அடிக்காமல் அன்பாகவும், அவர்களுக்குப் புரியும் விதத்திலும் அவர்களை வழிநடத்துவது அவசியம்.
எந்தக் காரணத்தைக் கொண்டும் நமக்கிருக்கும் தனிப்பட்ட கோபத்தையும் வெறுப்பையும் குழந்தைகள் மீது காட்டவே கூடாது. சில குழந்தைகள் ஹைப்பர் ஆக்டிவாக இருப்பார்கள். அதை கண்டுப்பிடித்து அவர்கள் போக்கில் சென்றுதான் வழிநடத்த வேண்டுமே தவிர அதற்கு மாற்றாக அடிக்க துவங்கினால் நீங்கள் எவ்வளவு அடித்தாலும் ‘வலிக்கலையே’ என்று சொல்லிவிட்டு அசால்டாக அதே தவறை திரும்பவும் செய்வார்கள். ஒரு கட்டத்தில் வளர வளர பெற்றோர் அடிப்பதை தாங்கிக் கொள்ளும் சக்தி இயல்பாகவே குழந்தைக்கு வந்துவிடும்.
’நான் ஏன் அப்பா, அம்மா சொல்வதைக் கேட்க வேண்டும்’ என முரட்டுத்தனமாய் மாறுவதுடன் பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையில் பனிப்போர் நடக்கும் சூழல் ஏற்பட்டுவிடும்’’ என்கிறார் எச்சரிக்கையாய்!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply