குழந்தைகளுக்கு வேண்டாம் டீடாக்ஸ் டயட்

Loading...

%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%ae%e0%af%8dசினிமாத் துறையினர், மாடலிங் செய்வோர், பாடி பில்டர்ஸ் மட்டுமே பின்பற்றி வந்த ‘டீடாக்ஸ் டயட்(Detox Diet)’, தற்போது நடுத்தர வர்க்கத்தினருக்கும் பரிட்சயமாகிவிட்டது. பல வீடுகளில் எடையைக் குறைக்க அதை பெரியவர்கள் கடைபிடிப்பதுடன், தங்கள் குழந்தைகள் குண்டாக இருந்தால், அவர்களையும் அதைப் பின்பற்றச் செய்கிறார்கள். ”அது மிகவும் தவறான செயல்” என்று சுட்டிக்காட்டுகிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் ஹரிணி.

”ஒருநாள் முழுக்க அல்லது குறிப்பிட்ட வேளை உணவுக்குப் பதிலாக வெறும் பச்சைக் காய்கறிகள், பழங்களை மட்டுமே உணவாகச் சாப்பிடுவது, அல்லது காய்கறிகளை வேகவைத்துச் சாப்பிடுவதான் டீடாக்ஸ் டயட். இதைக் கடைபிடிக்கும்போது முகப்பொலிவுடனும், இளமையாகவும், ஸ்லிம்மாகவும் இருக்கலாம். காய்கறிகளில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்(antioxidants) உடலிலுள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்றிவிடுவதே அதற்குக் காரணம்.
பெரும்பாலும், சினிமா, மாடலிங் துறையினர், உடல் எடை அதிகமானவர்கள், இளமையான தோற்றத்தை விரும்புபவர்கள் இந்த டீடாக்ஸ் டயட்டைப் பின்பற்றுவார்கள். சிலருக்கு, இந்த டயட்டை தொடர்ந்து கடைபிடிப்பதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுமா என சந்தேகம் இருக்கலாம். இந்த டயட்டால் உடலுக்கு எந்தத் தீங்கும் நேராது. எனினும், எல்லா வகை உணவுகளையும் உண்ணும்போது அதிலுள்ள அனைத்துச் சத்துக்களும் நமக்குக் கிடைக்கும். டீடாக்ஸ் டயட் நாட்களில், காய்கறிகள், பழங்களில் இருக்கும் வைட்டமின் மற்றும் மினரல்ஸ் மட்டுமே கிடைக்கும் என்பதால், அந்நாட்களில் உடல் சற்று சோர்வாகவும் களைப்பாகவும் இருக்கும். எனவே, இதை வாரத்தில் ஒரு குறிப்பிட்ட நாள் அல்லது ஒரு நாளில் குறிப்பிட்ட வேளை என்று மட்டும் கடைபிடிப்பது நல்லது.
இந்த டயட் கன்ட்ரோல் முறையை 20 வயதுக்கு மேற்பட்டோர் கடைபிடிப்பதுதான் ஆரோக்கியமானதாக இருக்கும். ஆனால் தற்போது பல பெற்றோர்கள், தங்களின் பள்ளி செல்லும் வயதுக் குழந்தைகளுக்கும், அவர்களின் உடல் பருமனைக் குறைக்க வேண்டி இந்த டீடாக்ஸ் டயட்டை பின்பற்றச் செய்கிறார்கள். மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்களிடம், இதைக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாமா என ஆலோசனையும் கேட்கிறார்கள்.
குழந்தைகளுக்கு டீடாக்ஸ் டயட் கொடுப்பது தவறு. பொதுவாக மனிதர்களின் உடலுக்குக் கால்சியம், புரோட்டின், வைட்டமின் மற்றும் மினரல் ஆகிய சத்துகள் சரிவிகித அளவில் தேவை. அதுவும் குழந்தைகளின் ஆரம்பகால வளர்ச்சிக்கு இச்சத்துக்கள் கட்டாயமாகத் தேவை. அதனால் குழந்தைகளுக்கு வாரத்தில் ஒரு நாளன்றோ, அல்லது ஒரு நாளின் ஒரு வேளை என பல வேளைகளுக்கோ டீடாக்ஸ் டயட் கொடுக்கும்போது, அவர்களுக்கு மற்ற அத்தியாவசியச் சத்துகள் கிடைக்காமல் தடைபடும். எனவே, டீடாக்ஸ் டயட் குழந்தைகளுக்கு வேண்டாம்.
குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு அன்றாட காலை, மதிய உணவுகளில் தலா ஒரு வகைப் பொரியலும், ஒரு நாளைக்கு ஒரு பழமும் சாப்பிடக் கொடுத்தாலே போதுமானது. மேலும், மாலை நேரங்களில் காய்கறி சூப்பும், அவ்வப்போது நறுக்கிய காய்கறிகளையும் கொடுக்கலாம்.
குழந்தைகளின் எடை குறைய, டயட் வழியல்ல. அவர்களை ஓடியாடி விளையாடவிடவும். அல்லது ஏதேனும் ஒரு விளையாட்டில் தொடர்ந்து ஈடுபட வைக்கலாம். பெரும்பாலும் காய்கறிகள், பழங்கள் என்றாலே முகம் சுளிக்கும் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே டயட் என்ற பெயரில் அதை ஒருவிதக் கட்டாயத்துடன் அவர்களுக்குச் சாப்பிடக் கொடுத்து, குழந்தைகள் அவற்றை முற்றிலும் வெறுக்கும் நிலைக்குத் தள்ளிவிடாதீர்கள்!”

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply