குறைந்த விலையில் உயர்தர உதிரிபாகங்கள்… புதிய விற்பனை மையங்களை தொடங்கியது மஹிந்திரா நிறுவனம்

Loading...

%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0ஆட்டோமொபைல் உலகில் பெரும்பாலானோர் அறிந்த ஒரு நிறுவனம் மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ். பழைய கார்கள் வாங்கவும், விற்கவும், சர்வீஸ் செய்யவும் தொடங்கப்பட்ட நிறுவனம் இது. மஹிந்திரா மட்டுமின்றி பல தரப்பட்ட கார் கம்பெனிகளின் பயன்படுத்தப்பட்ட கார் மாடல்கள் இங்கு விற்பனைக்கு உள்ளன. இந்தியாவின் நம்பிக்கைக்குரிய கார் கம்பெனிகளில் ஒன்றான மஹிந்திராவின் கிளை நிறுவனம் இது என்பதால், பழைய கார்களை வாங்க விரும்புவர்கள் அணுகக் கூடிய நம்பர் 1 இடமாக ஃபர்ஸ்ட் சாய்ஸ் விளங்குகிறது. இப்போது சிறப்புச் செய்தி என்னவென்றால், அனைத்து வாகனங்களுக்குமான தரமான உதிரி பாகங்களை விற்பனை செய்யும் பிரத்யேக மையத்தை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த மையம் தொடங்கப்பட்டிருந்தாலும், அதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதாகத் தெரிகிறது. மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸின் மொத்த வருவாயில் 10 சதவீதத்தை உதிரி பாகங்கள் விற்பனை மையம் ஈட்டித் தந்துள்ளதே அதற்கு சான்று. அடுத்து வரும் ஆண்டுகளில் 30-இல் இருந்து 40 சதவீதமாக அதன் வருவாயை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான நடவடிக்கைகளில் மஹிந்திரா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ஒரிஜினல் உதிரி பாகங்களைக் காட்டிலும் இங்கு விலை சுமார் 60 சதவீதம் வரை குறைவாகக் கிடைக்கிறதாம். இதனால்தான் ஓரிஜினல் தரத்திலான உதிரி பாகங்களை விரும்புவர்களின் முதல் தேர்வாக மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் இருக்கிறது. விற்பனையை அதிகரிப்பதற்காக, ஆட்டோ மொபைல் உதிரி பாகங்களைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து வர்த்தக நடவடிக்கைகளே மேற்கொள்ளவும் திட்டமிட்டிருக்கிறதாம் மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் கம்பெனி. நாடு முழுவதும் அந்நிறுவனத்தின் 160 சேவை மையங்கள் தற்போது உள்ளன. அவற்றை 300-ஆக அதிகரிக்கும் நோக்கிலேயே இதுபோன்ற திட்டத்துடன் மஹிந்திரா நிறுவனம் செயல்பட்டு வருவதாகத் தெரிகிறது. ஏற்கெனவே மார்க்கெட்டில் பல ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் உற்பத்தி நிறுவனங்கள் இருந்தாலும், அவற்றில் பெரும்பாலானவற்றை மக்கள் நம்புவதில்லை. அசலான உதிரி பாகங்களின் தரத்துக்கு நிகரான பொருள்களை விற்பதுடன், வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும் ஒருங்கிணைந்து பெறுமானால், மஹிந்திரா ஃபர்ஸ்ட் சாய்ஸ் நிறுவனத்தின் வெற்றியை எவரும் தடுக்க முடியாது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply