குடமிளகாய் சாதம்

Loading...

%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d
தேவையானப்பொருட்கள்:

பச்சரிசி – 1 கப்
குடமிளகாய் – 1
கொண்டைகடலை – 1/4 கப்
வெங்காயம் – 1
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்
எண்ணை – 4 முதல் 5 டீஸ்பூன் வரை
கடுகு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறுவறுத்து பொடிக்க:
காய்ந்தமிளகாய் – 2
தனியா – 1 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
இலவங்கபட்டை – ஒரு சிறு துண்டு
கிராம்பு – 1

செய்முறை:

கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே (அல்லது குறைந்தது 8 மணி நேரம்) ஊற வைக்கவும்.
ஊறிய கடலை நன்றாகக் கழுவி, அத்துடன் சிறிது தண்ணீரைச் சேர்த்து குக்கரில் மூன்று அல்லது நான்கு விசில் வரும் வரை வேக வைத்து எடுத்து வைக்கவும்.
வறுக்கக கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒரு டீஸ்பூன் எண்ணையில் சிவக்க வறுத்தெடுத்து, சற்று ஆறியவுடன், நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.
அரிசியை குழையாமல், உதிரியாக வேக வைத்தெடுக்கவும். சாதத்தை ஒரு தட்டில் கொட்டி அதன் மேல் ஓரிரண்டு டீஸ்பூன் எண்ணையை தெளிக்கவும்.
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். குடமிளகாயை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணையை விட்டு, காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுக்கவும். பின் அதில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். பின்னர் அதில் குடமிளகாய் துண்டுகளைப் போட்டு ஓரிரு நிமிடங்கள் வதக்கவும். அதன் பின், அதில் வேக வைத்துள்ள கொண்டைக்கடலை மற்றும் உப்பு போட்டுக் கிளறி விடவும். கடைசியில் சாதத்தைப் போட்டுக் கிளறி, அத்துடன் வறுத்து பொடித்து வைத்துள்ளப் பொடியை அதன் மேல் தூவி, மீண்டும் ஒரு முறை நன்றாகக் கிளறி விட்டு இறக்கி வைக்கவும்.

குறிப்பு:
கொண்டைக்கடலை சேர்க்க நேரமில்லையென்றால், அதற்கு பதில் தாளிப்பில் வேர்க்கடலையோ அல்லது முந்திரி பருப்போ சேர்த்து செய்யலாம். அல்லது எந்தவிதக் கடலையும் சேர்க்காமலும் செய்யலாம். கடலை வகைகளைச் சேர்த்தால் சுவை சற்றுக் கூடும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply