கீரைத்தண்டு கூட்டு

Loading...

%e0%ae%95%e0%af%80%e0%ae%b0%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81சதுரமாக நறுக்கிய கீரைத்தண்டு – 2 கப்,
உப்பு – தேவைக்கு,
புளி – எலுமிச்சைப்பழ அளவு,
வேகவைத்த துவரம் பருப்பு – 2 கப்,
சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்.

வறுத்து அரைக்க:

தனியா – 2 டேபிள்ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்,
மிளகு – 1/2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 4,
துருவிய தேங்காய் – 1/2 கப்,
வறுக்க எண்ணெய் – 1/4 கப்.

கடாயில் எண்ணெயை சூடாக்கி வறுக்க கொடுத்தவற்றை ஒவ்வொன்றாகச் சிவக்க வறுத்து, அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும். கீரைத்தண்டை மேல் நாரெடுத்து துண்டுகளாக்கி, உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேக வைக்கவும். பின் புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும். சாம்பார் பொடி, வேகவைத்த பருப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். கடைசியில் அரைத்த விழுதும் சேர்த்துக் கொதிக்கவிடவும். மற்றொரு கடாயில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், கடலை பருப்பு, ெபாடியாக நறுக்கிய தேங்காய்ப் பல் இவற்றை நெய்யில் தாளித்து கொட்டி பரிமாறவும். சாதத்துடனும், சைட்டிஷ்ஷாகவும் சாப்பிடலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply