கிராஃபீன் பேனல்கள் கொண்ட உலகின் முதல் கார் அறிமுகம்

Loading...

%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%be%e0%ae%83%e0%ae%aa%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9fபிஏசி மோனோ எனப்படும் கிராஃபீன் எனப்படும் பொருள் கொண்டு செய்யபட்ட உலகின் முதல் கார், அறிமுகம் செய்யபட்டுள்ளது. பிஏசி மோனோ தொடர்பான கூடுதல் தகவல்களை வரும் ஸ்லைடரில் தெரிந்து கொள்ளலாம்.
பிஏசி…
பிஏசி அல்லது பிரிக்ஸ் ஆட்டோமோட்டிவ் கம்பெனி (Briggs Automotive Company) என்று அழைக்கப்படும் நிறுவனம், இங்கிலாந்தை மையமாக கொண்டு இயங்கும் ஸ்போர்ட்ஸ் கார் தயாரித்து வழங்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம், இங்கிலாந்தின் லிவர்பூல் எனப்படும் பகுதியில் உள்ள ஸ்பீக் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம், 2009-ஆம் ஆண்டில் நீல் பிரிக்ஸ் மற்றும் இயான் பிரிக்ஸ் எனப்படும் 2 சகோதரர்களால் நிறுவப்பட்டது.
பிஏசி மோனோ…
பிஏசி மோனோ என்பது இங்கிலாந்தை மையமாக கொண்டு இயங்கும் பிஏசி நிறுவனம் தயாரித்து வழங்கும் ஸ்போர்ட்ஸ் கார் ஆகும். மோனோ தான் இந்த நிறுவனம் மூலம் உருவாக்கப்பட்ட முதல் கார் ஆகும். சென்ட்ரல் (மத்தியில்) சீட் அமைப்பு கொண்ட இது, தூயமான டிரைவிங் அனுபவத்தை வழங்குவதற்காகவே தயாரிக்கப்பட்டது.
முதல் நிறுவனம்;
இந்த பிஏசி நிறுவனம் தான், உலக அளவில் முதன் முதலில், கார் கட்டமைப்பிற்காக கிராஃபீன் பொருட்களால் ஆன உதிரி பாகங்கள் தயாரித்து உபயோகித்துள்ளது.
கிராஃபீன்;
கிராஃபீன் என்பது கார்பனின் ஷீட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட பொருள் ஆகும். இவை வெறும் ஒரு கிராஃபீன் அணுவின் தடிமன் தான் கொண்டிருக்கும்.
கிராஃபீன் பிரயோகம்;
கிராஃபீன் கொண்டு தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்கள், ஆரம்ப கட்டத்தில், பிஏசி மோனோ ஸ்போர்ட்ஸ் காரின் ரியர் வீல் ஆர்ச்களில் உபயோக்கிகப்பட உள்ளது. இந்த கிராஃபீன் பேனல்கள் கொண்டுள்ள பன்முகதன்மையினால் தான், இந்த மெட்டீரியலை ரியர் வீல் ஆர்ச்களில் உபயோகிக்க பிஏசி நிறுவனம் முடிவு செய்துள்ளது.
வலுவானது;
கிராஃபீன் கொண்டு தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்கள், வழக்கமான உதிரி பாகங்களின் எடையை விட 20% எடை குறைவானதாக இருக்கும். மேலும், இவை ஸ்டீல் உடன் ஒப்பிடுகையில், 200 மடங்கு வலுவானதாக உள்ளது.
இஞ்ஜின்;
2016 பிஏசி மோனோ, 4-சிலின்டர்கள் உடைய 2.5 லிட்டர் மௌன்ட்யூன் (Mountune) இஞ்ஜின் கொணடுள்ளது. இந்த இஞ்ஜின், 305 பிஹெச்பியை வெளிப்படுத்தும் திறன் உடையதாகும்.
சிங்கிள் சீட்டர்;
பிஏசி மோனோ, ஒரே ஒருவர் மட்டுமே அமரும் வசதி கொண்ட சிங்கிள் சீட்டர் வாகனம் ஆகும்.
செயல்திறன்;
பிஏசி மோனோ, நின்ற நிலையில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வரையிலான வேகத்தை 2.8 நொடிகளில் எட்டிவிடும். உலகிற்கு
அறிமுகம்;
கிராஃபீன் பேனல்கள் கொண்ட உலகின் முதல் காரான பிஏசி மோனோ, முதன் முதலாக இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற சைன்ஸ் இன் தி சிட்டி ஃபெஸ்டிவல் (Science in the City festival) நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.

Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply